states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திற்பரப்பு அருவியில் குவிந்த பயணிகள்

நாகர்கோவில்,பிப்.18- வெயிலின் தாக்கத்திலிருந்து மீள  குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்ற னர். குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குமரி யின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து, கொட்டும் மிதமான தண்ணீரில் நீராடி மகிழ்ந்து வரு கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் அண்டை மாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பய ணிகள் திற்பரப்பு அருவியில் குவிந்து  வருகின்றனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் விடுமுறை நாட்க ளில் நீர் நிலைகளை நோக்கி படை யெடுத்து வருகின்றனர்.அந்த வகை யில் திற்பரப்பில் குவியும்  சுற்றுலாப் பய ணிகள் கூட்டம் கொட்டும் மிதமான தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்வது மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

காட்டு யானை தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி,பிப்.18- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன் கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி பகுதி யில் காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை அருகே உள்ள அன்னியாலம் கிராம பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. அதை அறியாமல் அப்பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மனைவி வசந்தம்மா கூலி வேலைக்கு தோட்டம் ஒன்றின் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு காட்டு யானை இருப் பதை பார்த்துள்ளார். பிறகு, அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் காட்டு யானை அவரை துரத்தி சென்று தாக்கியதில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சிறிது நேரத்தில் தாசரப்பள்ளி கிரா மத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ப வரது மனைவி அஸ்வத்தம்மா என்பவ ரையும் அதே காட்டு யானை தாக்கி யுள்ளது. அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் மற்றும் வனத்துறையினர், இருவரது உடலை யும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  ஒரு காட்டு யானை ஒரே நேரத்தில், இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அன்னியாளம், தாவரக்கரை, தாசரப்பள்ளி உள்ளிட்ட கிராமபகுதி களில்சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோடையில் மின்தடை இருக்காது: வாரியம்

சென்னை,பிப்.18- தமிழ்நாட்டில் கோடை காலத்தில்  மின்தடை இருக்காது என்று மின்சார வாரியம் உறுதியளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் மின்தடை இருக்காது எனவும் பள்ளி, கல்லூரிகளில் தேர்வு கள் தொடங்கியுள்ள நிலையில் மாநி லம் முழுவதும் தடையில்லா மின்சா ரம் வழங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

10 பேர் பலியான பட்டாசு ஆலை விபத்து உரிமையாளர் உட்பட  3 பேர் மீது வழக்கு

10 பேர் பலியான பட்டாசு ஆலை விபத்து உரிமையாளர் உட்பட  3 பேர் மீது வழக்கு வெம்பக்கோட்டை, பிப்.18- வெம்பக்கோட்டை அருகே பட்  டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி யான சம்பவத்தில் காவல்துறை யினர்,  உரிமையாளர் உட்பட 3 பேர்  மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   விருதுநகர் மாவட்டம் வெம் பக்கோட்டை அருகே உள்ளது இராமுத்தேவன்பட்டி. இங்கு விக் னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் சனிக்கிழமை மதியம் ஏற்பட்ட வெடி  விபத்தில் 10 தொழிலாளர்கள் உடல்  சிதறி உயிரிழந்தனர்.   இதுகுறித்து ஆலங்குளம் வரு வாய் அலுவலர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன்பேரில் ஆலங்குளம் காவல்துறையினர் ஆலை உரிமையாளரான சிவகாசி யைச் சேர்ந்த விக்னேஷ், போர் மேன்களான தொம்பக்குளத்தைச் சேர்ந்த சுரோஸ்குமார், மாதாங் கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய பால் ஆகியோர் மீது வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.