states

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு

கோவை, செப்.20- கோவை அருகே பெரியார் சிலை மீது சாணி ஊற்றி அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், கிணத்துக் கடவு தாலுகா, வடசித்தூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பெரி யார் நினைவு சமத்துவபுரம் அமைந் துள்ளது. இப்பகுதியில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. கடந்த  சில நாட்களுக்கு முன்பு பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னி ட்டு பல்வேறு தரப்பினரும் இந்த  பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிலையில் செவ்வாயன்று இரவு அடையாளம் தெரியாத நபர் களால் பெரியார் சிலை மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி அவ மரியாதை செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீ சார் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட் களாக சனாதனம் குறித்த சர்ச்சை கள் நடந்து கொண்டிருக்கும் நிலை யில், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியார் சிலையை அவமதித்தார்களா அல்லது வேறு யாரேனும் வேறு காரணங் களுக்கான அவமதித்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.  பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தபெதிக,  திக, திவிக உள்ளிட்ட அமைப்பி னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.