சென்னை,ஏப்.11- தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 54,439 அங்கன்வாடி மையங்களில் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 7,441 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டிடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தில் பேசிய பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தி.வேல்முரு கன் எழுப்பிய கேள்வி பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “தமிழகத் தில் மொத்தம் 54,439 அங்கன்வாடி மையங் கள் செயல்பட்டு வருகிறது. சில இடங்களில் 2 அல்லது 3 குழந்தைகள் இருக்கிற இடங்க ளிலிருந்து குழந்தைகள் அதிகம் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த 54,439 இல் 7,441 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்க ளுக்கும் சொந்த கட்டிடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.