சென்னை,செப்.3- காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, சைதாப்பேட்டையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஏற்கனவே காலியாக உள்ள 1021 மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் மேலும் ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனையும் எம்.ஆர்.பி. மூலம் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 208 மருத்துவமனைகள் திறக்கப்பட வேண்டும். மருத்துவமனைகள் தயாரானவுடன் அதற்கான பணி நியமனங்கள் நடைபெற்று திறந்துவைக்கப்படும் என்று தெரிவித்தார்.