states

img

பொறியியல் படிப்புக்கு கணிதம் கட்டாயமில்லை!

சென்னை, மார்ச் 30- பெரும்பாலான பொறியியல் படிப்பிற்கு  கணிதம் கட்டாயமில்லை என அகில இந்திய  தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் அறிவித் துள்ளது. 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில  இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளி யிட்டுள்ளது. அதில் பொறியியல் பிரிவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது. இதன்மூலம் 12ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களும் இனிவரும் காலத்தில் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2021 மற்றும் 2022ஆம் கல்வி யாண்டிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்ட விதிமுறைகளில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங் களை 12ஆம் வகுப்பில்  விருப்பப் பாடமாக  மட்டும் படித்திருந்தால் அனைத்து பொறி யியல் படிப்புகளிலும் சேரலாம் என  தெரிவித்திருந்தது. இதற்கு கல்வியாளர்கள்  மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி யது குறிப்பிடத்தக்கது.