states

img

பருவம் தவறிய மழை, பணவீக்கம் காரணம்? இந்தியாவில் தங்கம் விற்பனை வீழ்ச்சி

பருவம் தவறிய மழை, பணவீக்கம் காரணம்?  இந்தியாவில் தங்கம் விற்பனை வீழ்ச்சி சென்னை, செப்.19- தங்கம் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உயர்த்தியதாலும், தங்கம் விலை அதிகரித்ததாலும் விற்பனை சிறிது குறைந்துள்ளதாக வணிகர்கள் தெரி வித்துள்ளனர்.  2021 ஏப்ரல் முதல் 2022 பிப்ரவரி வரையான காலத்தில் இந்தியா 824.28 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. 2021 ஜூனில் 17 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி, 2022 ஜூனில் 49 டன்னாக அதிகரித்திருந்தது.  இந்நிலையில், விவசாய உற்பத்தி குறைந்து வேளாண் வருமானம் சரியும் என்பதால் வரும் மாதங்களில் தங்கம் விற்பனை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தி யாவில் தங்கம் விற்பனை இவ்வாண்டு 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ஏற்கனவே கணித்தது கனவானது. சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 2020, ஏப்ரலில் இருந்த அளவுக்கு அதாவது ஒரு அவுன்ஸ் 1,662 டாலராக சரிந்துவிட்டது. டாலர் கணக்கில் தங்கம் விலை சரிந்துள்ள போதிலும் டாலரின் மாற்று மதிப்பு உயர்வால், ரூபாய் கணக்கில் தங்கம் விலை குறையாமல் உள்ளது. கடந்த ஆண்டை போலவே இவ்வாண்டும் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 800 டன் அளவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.