திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந் தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்டு 20 சுங்கச் சாவடிகளில் ரூ.20 முதல் ரூ.65 வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமை யான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள பின்னணி யில் இந்த உயர்வு ஏற்க முடியாதது. அதுவும், சுங்கச் சாவடிகளிலும், சாலை அமைப்பதி லும் அதீதமான உயர்வினை செய்து, ரூ 7.5 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்படுத்தியிருப்பது சி.ஏ.ஜி அறிக்கையில் அம்பலப்பட்டுள்ள பின்னணியில் இது மக்களை மேலும் கொள்ளையடிப்பதாகும். கோடிகளில் கொள்ளையடித்திருக்கும் பாஜக பண முதலைகளின் பைகளில் இருந்து வசூலிக்காமல், ஏழை மக்களின் தலைகளில் விலை ஏற்றத்தை திணிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசு, சுங்க கட்டண உயர்வினை உடனடி யாக திரும்பப் பெறுவதுடன், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கட்டண உயர்வு என்ற கொள்கையை திரும்பப் பெற்றிட வேண்டும்.