கோவை, அக்.24 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மறைந்த தோழர் யு.கே.சிவஞானம் அவர்களின் படத்திறப்பு மற்றும் புக ழஞ்சலி கூட்டம் புதனன்றுநடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பின ரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் துணைத்தலைவருமான தோழர் யு.கே.சிவஞானம் அவர்கள், கடந்த ஆறாம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது படத்திறப்பு - புகழஞ்சலிக் கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள சிருஷ்டி அரங்கத்தில் புதனன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜாகீர் முன்னிலை வகித்தார். இதில், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், இரா.விஜயராஜன், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டி ணன் ஆகியோர் பங்கேற்று, மறைந்த தோழர் யுகே.சிவஞானம் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, அவரின் உணர்வுப்பூர்வமான களப் பணிகள் குறித்து நினைவு கூர்ந்து உரையாற்றினர். தோழர் யு.கே.சிவஞானம் அவர் களின் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3 லட்சத்தை கட்சியின் தலைவர்கள், குடும்பத்தாரிடம் வழங்கினர். இந்நிக ழ்வில் திரளானோர் பங்கேற்றனர்.