புதுச்சேரி, செப்,27- காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2020- 21-ம் ஆண்டு புயல் காரணமாக விவசாய பயிர்கள் மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதற்கு பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் 437 விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க வில்லை. விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி காரைக்கால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட விவ சாயிகளை அலுவலகத்திற்கு வரவழைத்து அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் பேசினர். பி.ஆர்.சிவா எம்எல்ஏ., ஆட்சியர் குலோத்துங்கன், வேளாண்துறை செயலாளர் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஒரு வார காலத்திற் குள் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.மேலும் காரைக்கால் மாவட்டத்தில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைக்கவும், புதிய கிணறுகள் அமைக்கவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இதனை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.