states

தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசினார். அப்போது, “ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலை வாய்ப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முத லீட்டுக் கழகம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ. 2 ஆயிரத்து 100 கோடி  கடன் வழங்கப்படும். உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங் கள் 60 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள் ளன. தொழில் முதலீடுகளை ஈர்க்க மு.க. ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

விண்வெளி தொழில் கொள்கை

தொடர்ந்து பேசிய அவர், பொம்மைகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு சலுகைகளுடன் கூடிய ஒரு சிறப்புத் திட்டம் வெளியிடப்படும். டோக்கியோவில் வழிகாட்டி நிறுவனம்  மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு அமைக்கப்பட்டு, ஜப்பான் நாட்டிடம் இருந்து அதிகளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும்.

புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். திருச்சிராப் பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் ஒரு சிப்காட் தொழிற் பூங்கா உருவாக்கப்படும். திரு வாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் உரு வாக்கப்படும்.

டைடல் பூங்காக்கள்!

கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் புதிய மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப் படும். 1,150-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும், 8,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2,100 கோடி கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 23 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.


 

;