states

அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது!

சென்னை, பிப்.10 - அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் தெரிவித்துள்ளார். அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழா வில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லாத தால், தான் பங்கேற்கவில்லை என்று முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் கூறியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் பலரும்  கருத்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டிய ளித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், “தில்லி தேர்தல்  தோல்வியையடுத்து இந்தியா கூட்டணி கூட்டம் கூட்டப்பட  வேண்டும். தில்லி தேர்தல் முடிவுகள், இந்தியா கூட்டணி யின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. அதிமுகவை பாஜக  விழுங்கப் பார்க்கிறது. அதிமுக பலவீனம் அடையக் கூடாது.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க  வேண்டும். நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசே  சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்றார்.