states

img

லயன்ஸ் பள்ளியில் கலைச்சங்கம விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன.30- ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 46வது கலைச் சங்கம ஆண்டு விழா பள்ளி தாளாளர் ஆர்.வெங்கடாசலபதி தலைமையில் நடைபெற்றது. வைணவி வரவேற்றுப் பேசினார்.  பள்ளி முதல்வர் எம்.சுந்தரமகாலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் லயன்ஸ் சங்க ஆளுநர் டாக்டர் பி.அய்யாதுரை, சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் மாற்றுத் திறனாளி மாண வர்கள் ஐந்து பேரின் பெற்றோருக்கு இலவச தையல் இயந்திரம், 30 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சீருடை, ஏழைப் பெண்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம், நடைபாதை வியாபாரி களுக்கு 10 நிழற்குடை, வள்ளலார் அறக்கட்டளை இல்லத்திற்கு பிப்ரவரி மாதம் முழுவதும் உணவு ஆகிய நல உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழை மாணவருக்கு இரண்டாம் ஆண்டு கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டது.  இதில் பள்ளி மாணவ - மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், துணை முதல் வர், லயன்ஸ் சர்வோதய பள்ளி முதல் வர், துணை முதல்வர், லயன்ஸ் துவக்க ப்பள்ளி முதல்வர், பெற்றோர்கள், மாணவ - மாணவியர் கலந்து கொண்ட னர். எம்.ஹரிகார்த்திக் நன்றிகூறினார்.