states

அரசாணை 230-ஐ அமல்படுத்துக!

தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளிலும் விவசாயிக ளுக்கு தேவையான தொழில் நுட்பங்கள், திட்ட பயன்கள் குறித்த விப ரங்களை எடுத்துச்செல்வதற்காக வேளாண்மைத் துறையின் தோட்டக் கலைத் துறையில் (3684) விரிவாக்க உத வியாளர்கள் தனித்தனியாக பணியாற்றி வருகின்றனர். இதனால் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் வேளாண்மை உதவி விரிவாக்க அலுவலர்கள் ஒரு ஊராட்சிக்கு செல்லும் நிலை உள்ளது. கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர் நிய மிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர். இதன் பொருட்டு 2020-21 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வேளாண்மை உழவர் நலத்துறைக்கு தனியான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அதில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அறிவித்தது. இதன்படி விரைவாக வேளாண்மை தொழில்நுட்பங்கள், அரசு திட்டங்களை கொண்டு செல்ல மூன்று முதல் நான்கு கிராமங்களுக்கு ஒருவர் என 4,311 விரி வாக்க அலுவலர் நியமிக்கப்படுவார்கள்; இந்த அலுவலர்கள் வேளாண்மை தோட்டக்கலை, மலை பயிர்கள், வேளாண் மை வணிகம், உழவர் சந்தை, வேளாண் மை பொறியியல் சார்ந்த அனைத்து பணி களையும் கிராம அளவில் ஒருங்கிணை த்து செயல்படுத்தப்படும் என சட்டமன்றத் தில் உழவர் நலத்துறை அமைச்சர் அறி விப்பு செய்தார். அதன்படி தமிழ்நாடு அரசு 30.10.2023 அன்று அரசாணை நிலை எண் 230 வெளியிட்டுள்ளது. ஆனால் அரசாணை வெளியிட்டு ஏழு மாதங்கள் ஆகியும் அமல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிக ளுக்கு விரைவாக அரசின் திட்டங்கள், தொழில் நுட்பங்கள்  சென்றடையும் வகை யில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தின் படி கிராம அளவில் அனைத்து பணிகளை யும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வெளி யிடப்பட்ட வேளாண்மை உழவர் நலத்துறை அரசாணை எண் 230-ஐ தமிழ்நாடு அரசு விரைவாக அமல்படுத்த வேண்டும்.

;