மதுரை, மே 4- ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டு மென வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் எஸ்.ரத்தினவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- ஜி.எஸ்.டி வசூல், இதுவரை இருந்த சாத னையை முறியடித்து, 2024-ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி யுள்ளது. இதற்குக் காரணம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் நுகர்வு அதிகரிப்பு மற்றும் தொழில்; வணிகத்துறை முறையாக வரி செலுத்துவது மட்டுமல்ல, மிகவும் அதிகமான வரி வீதங்களும், புரிந்து கொள்ள முடியாத சட்டவிதிகளால் தொழில் வணிகத்துறை செலுத்த வேண்டிய கூடுத லான அபராதம், வட்டி ஆகியவையும் தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் வேறுவழியின்றி, மிகவும் சிரமத்துடன் இவ்வளவு பெரிய வரித் தொகை யைச் செலுத்துகிறார்கள். ஜி.எஸ்.டி வரி வீதத்தை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டியதின் அவசியத்தையும், ஜி.எஸ்.டி வரிச் சட்டத்தை எளிமையாக்க வேண்டிய தின் அவசியத்தையும் இந்தச் சாதனை வரி வசூல் காட்டுகிறது என்றே வேளாண் உணவு வர்த்தகச் சங்கம் கருதுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு வேளாண் உணவு உற்பத்திப் பொருட்கள் விவசாயிகள், வணிகர்கள் என யார் கையில் இருந்தாலும் அது நுகர்வோரைச் சென்றடையும் வரை, பிற அத்தியாவசியப் பொருட்களுக்கும் முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். பதனீடு செய்யப்பட்ட, மதிப்புக்கூட்டி தயாரிக்கப்பட்ட அனைத்து வேளாண் உணவுப் பொருட்களுக்கும், மக்க ளுக்கு அன்றாடம் தேவைப்படும் அவசியப் பொருட்களுக்கு 5 சதவீத வரியும், பிற அனைத்துப் பொருட்களுக்கும், சேவைக ளுக்கும் 10 சதவீத வரியும், ஆடம்பரப் பொ ருட்களுக்கு 15 சதவீத வரியும் விதிக்க வேண்டும். லாகிரி வஸ்துக்கள் போன்ற பொருட்களுக்கு அவற்றின் நுகர்வைத் தடுக்கும் வகையில் கூடுதல் வரி விதிக்க லாம். வரிக்கு மேல் வரி விதிக்கப்பட்டு பொ ருட்களின் விலை உயர்வு ஏற்பட்டு விடக்கூடாது. வரிச்சட்டத்தை எளிமைப் படுத்தி, முறையாக வரி செலுத்துவதற்கு தற்போது ஏற்படும் பெரும் செலவைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.