சென்னை, ஜூன் 28- தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் 21 பிரிவுகளில், 3 ஆயிரத்து 645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமி டப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனைகள்
தமது துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்து அமைச்சர் மா. சுப்பிர மணியன் மேலும் பேசியதாவது: “சென்னை கிண்டியிலும், தஞ்சாவூரிலும், ‘குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை’ ரூ. 250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணி யிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர், தாய்மை துணை செவிலியர் பதவியில் உள்ள 367 இடங்கள், கண் மருத்துவ உதவி யாளர் பதவியில் உள்ள 100 இடங்கள், மருந்தாளுநர் (சித்தா) பதவியில் உள்ள 49 இடங்கள் உள்ளிட்ட 21 வகை பதவிகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்ப ருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித் தாள் கட்டாயம்
அனைத்துத் தேர்வுகளிலும், கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் இடம்பெறும். தேர்வு களை நெறிப்படுத்தி, வலுவான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒளிவு மறைவற்ற வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மிக அதிக உடல் எடையுடன் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குடலிறக்கம், கல்லீரல் செயலிழப்பு, இதயநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ளோருக்கான உயிர்காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை சென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனைகள்
மேலும், ஆரம்ப நிலையிலேயே புற்று நோய்களை கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள், கர்ப்பிணித் தாய்மார்க ளுக்கு ஊடுகதிர் பரிசோதனை, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட நிதியுதவியுடன், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனையில் வழங்கப்படும். ரூ. 1.08 கோடி மதிப்பீட்டில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்படும். பச்சிளங் குழந்தை களுக்கான சிறப்புக் கண்காணிப்பு மையங்கள், ரூ. 26.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு மா. சுப்பிரமணியன் கூறினார். அதனைத் தொடர்ந்து 110 அறிவிப்பு களையும் வெளியிட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை
அதில், “ரூ. 250 கோடியில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்படும். ரூ. 50 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை சென்னையில் அமைக்கப்படும். புற்றுநோய்களை கண்டறியும் மையம் அனைத்து மாவட்டங்களிலும் விரி வுப்படுத்தப்படும். விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு சேவைகளை மேம்படுத்த 5 அவசரகால மருத்துவ அலுவலர்கள் நிய மிக்கப்படுவார்கள். பச்சிளங் குழந்தைகள் நலனை சிறப்பாக கண்காணிக்க புதிய திட்டம் செயல்படுத்தப் படும். கர்ப்பிணிகளுக்கு ”ஊடுகதிர் பரிசோ தனை” மேற்கொள்ளப்படும். சிறுநீரகம் - விழித்திரை பாதிப்புக்கான சிறப்பு பரிசோத னைகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்” என்பன போன்ற அறிவிப்புகளை வெளி யிட்டார்.