states

img

பழங்குடியின மக்களுக்கு எதிராக பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தின் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் மதன் திலாவர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,”ஒருவர் இந்துவா? இல்லையா? என்பதை அவர்களின் டிஎன்ஏவை வைத்து பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் இந்துவாக இல்லையென்றால், அவர்களின் தந்தை  யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்”  என மதவெறியை தூண்டும் வகை யிலும், பழங்குடியின மக்களை அவ மதிக்கும் வகையில் பேசினார். இவரது  பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், பாஜக அமைச்சர் மதன் திலாவரின் பேச்சை கண்டித்து  வியாழனன்று ராஜஸ்தான் சட்டமன்றத்  தில் காங்கிரஸ், பாரதிய ஆதிவாசி  உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் ஆவேசத்துடன் முழக்கங்களை எழுப்பினர். இதனால் ராஜஸ்தான் சட்ட மன்றம்  2 முறை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சிகளின் ஆவேச போராட்டம் குறையாத நிலையில், நாள்  முழுவதும் சட்டமன்றம் ஒத்திவைக்கப் பட்டது.

சாக்குப்போக்கு கூறி அமைச்சரவையில் இருந்து 
ஓட்டம் பிடித்த பாஜக மூத்த தலைவர்

சமீபத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சியில் அமர்ந்தது. முதல் வராக பஜன்லால் சர்மா உள்ளார். 

தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைத்தா லும் பாஜக எம்எல்ஏக்கள் பல்வேறு கோஷ்டிகளாக பிரிந்து உள்ளனர். அதாவது மோடி - அமித்  ஷா கோஷ்டி, முன்னாள் முதல்வர் வசுந்தரா  ராஜே கோஷ்டி என இரண்டு பிரிவு உள்ளது.  இதனை பாஜக வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் தற்போது கோஷ்டி பூசல் காரணமாக மூத்த பாஜக தலைவர் ஒருவர் அமைச்சரவையை விட்டு ஓட்டம்  பிடித்துள்ளார். ராஜஸ்தான் அமைச்சரவை யில் விவசாயம், தோட்டக்கலை, கிரா மப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளை நிர்வாகித்து வரும்  கிரோடி லால் மீனா மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வ தாக அறிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலின் போது கிரோடி  லால் மீனா மொத்தம் 7 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், 3இல்  மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. கிரோடி லால் மீனாவின் சொந்த தொகுதியான தவ்சா உள்பட 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் படுதோல்வியடைந்தனர். இந்நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவி யை ராஜினாமா செய்து 10 நாட்களுக்கு முன்பே முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் வழங்கியதாக கிரோடி லால் மீனா கூறி யுள்ளார். ஆனால் கோஷ்டி பூசல் கார ணமாகவே கிரோடி லால் மீனா சாக்குப் போக்கு கூறி அமைச்சரவையில் இருந்து  ஓட்டம் பிடித்தார் என தகவல் வெளியாகி யுள்ளது.

;