states

img

இன்று கோடியேரியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மறைந்த கேரள மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப் பினருமான கோடியேரி பாலகிருஷ்ணனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் செவ் வாயன்று  விரிவான நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்படு கிறது. கண்ணூர் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பய்யம் பலத்தில் உள்ள நினைவிடத்தில் மல ரஞ்சலி செலுத்தப்படுகிறது. சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாநில செயலாளர் எம்.வி.கோ விந்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முற்பகல் 11.30 மணிக்கு கோடியேரியின் வீட்டில் அவரது வெண்கலச்சிலையை கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கோடியேரியின் வீடு அமைந்துள்ள மூளி பகுதியில் செந் தொண்டர்கள் அணிவகுப்பையும் பொதுக்கூட்டத்தையும் பிருந்தா காரத் துவக்கி வைக்கிறார்.