states

img

2025-க்குள் மாநிலம் முற்றிலும் தூய்மையாகிவிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி

கொச்சி, பிப்.5- 2025 ஆம் ஆண்டுக்குள் கேரளாவை அனைத்து வழிகளிலும் தூய்மையான மாநிலமாக மாற்றும்  நோக்கத்தில் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கழிவு மேலாண்மை துறையில் மேம் பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த சர்வ தேச பயிலரங்கமான ‘ஜிஇஎக்ஸ் கேரளா-23’-ஐ முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை (பிப்.4) தொடங்கி  வைத்தார்.  அப்போது முதல்வர் பேசுகையில், “சிறிய அளவில் இருந்தாலும், ஒவ்வொரு  வார்டையும் முடிந்த அளவு குப்பை கள் இல்லாத இடமாக மாற்ற வேண்டும்.  பின்னர் அனைத்து பொது நிறுவனங்க ளையும் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புறங் களில் உள்ள சிறு நகரங்களையும் குப்பையில்லாமல் மாற்றுவது குறித்து முதல் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள் ளப்படும். வார்டுகள், பஞ்சாயத்துகள், நகராட்சிகள், ஒன்றியங்கள், சட்ட மன்ற தொகுதிகள் மற்றும் மாவட்டங் களின் வரிசையில் விரிவான கழிவு மேலாண்மை உறுதி செய்யப்படும். ஒவ்வொரு நிலையிலும் சிறந்த செயல்பாட்டிற்காக ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாவட்டங்களுக்கு சிறப்பு விருது வழங் கப்படும். ஒவ்வொரு உள்ளாட்சி அமைப் புகளின் கழிவு மேலாண்மை செயல் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு தனி தரம் வழங்கப்படும். தொழில்நுட்ப ஆத ரவை உறுதி செய்ய நிரந்தர பசுமை தணிக்கை குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கழிவுநீர்  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் படும். கழிவுகளை அப்புறப்படுத்தா விட்டால் நமக்கு நாமே கேடு விளை விக்கிறோம் என்பதை உள்ளாட்சி அமைப்புகள் புரிந்து கொண்டு, கழிவு  மேலாண்மையில் முனைப்பு காட்ட வேண்டும். சமூக, பொருளாதாரத் துறைகளில்  மாநிலம் எவ்வளவு முன்னேற்றம் கண்டதோ, அந்த அளவுக்கு கழிவு களை அகற்றுவதில் மாநிலம் முன் னேறவில்லை. இந்த தடையை போக்க சமுதாயத்தின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும்” என்றார்.

;