states

30 சதவீதம் வரை தள்ளுபடியுடன் ஓணம் சந்தை

திருவனந்தபுரம், ஆக.21- வயநாடு பேரிடரைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும், மற்ற கொண்டாட்டங்கள் வழக்கம் போல் நடை பெறும் என்று முதல்வர் பின ராயி விஜயன் தெரிவித்துள் ளார்.

கலைஞர்களும், வியா பாரிகளும் ஓணம் பண்டிகை யால் சாதாரண மக்களைத் தொந்தரவு செய்யும் நிலை ஏற்படாது. ஓணத்தின் போது, சப்ளைகோ விற் பனை நிலையங்கள் மூலம் தினசரி உபயோகப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். தினசரி பயன் பாட்டிற்கான 13 பொருட்கள் மானிய விலையில் விநியோ கிக்கப்படும். இது தவிர, முன்னணி நிறுவனங்களின் பிராண்டட் தயாரிப்பு களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படும்.

காதி பொருட்களுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளு படி வழங்கப்படும். ரூ.15 கோடி தள்ளுபடிக்காக பட் ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள் ளது. கூட்டுறவுத் துறையில் உள்ள கைத்தறி குழுக்கள் மற்றும் நெசவாளர்கள் பயன் பெறும் வகையில் செப்டம் பர் 14-ஆம் தேதி வரை தள்ளு படியில் விற்பனை நடத்தப் படும். ரோப்ஃபெட் கயிறு தயாரிப்புகளுக்கு செப்டம் பர் 30 வரை 23 சதவிகி தம் வரை தள்ளுபடி வழங்கு கிறது. மெத்தைகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி.

பொதுவான காய்கறிகள் மொத்த விலையை விட 10  சதவிகிதம் கூடுதல் விலை யில் கொள்முதல் செய்யப்  படுகிறது. சந்தை விலையை விட 30 சதவீதம் குறைவாக விற்பனை செய்யப்படும். இயற்கை உரங்களை பயன் படுத்து உற்பத்தி செய்யப் படும் காய்கறிகள் மொத்த விலையை விட 20 சதவிகிதம் கூடுதல் விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். 

சந்தை விலையை விட 10 சதவிகிதம் வரை குறை வாக விற்பனை செய்யப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.