கேரள பொதுத்துறைகள் எப்படி வெற்றிகரமாக செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள மிசோராமில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் குழு கேரளத்திற்கு வருகைதந்துள்ளனர்.
இது குறித்து கேரள அமைச்சர் பி.ராஜீவ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
கேரள பொதுத்துறைகள் எப்படி வெற்றிகரமாக செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள மிசோராமில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் குழு கேரளத்திற்கு வருகைதந்துள்ளனர்.
கேரளத்தின் வழிமுறைகளை மிசோராமில் செயல்படுத்த அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் 2030க்குள் ரூ.9,467 கோடி முதலீடுகளைப் பெற ஒரு பரந்த திட்டத்தின் அடிப்படையில் பொதுத்துறைகள் செயல்படுகின்றன. தொழில் தொடங்க எளிதான வழிமுறைகள் கொண்ட முதல் தர மாநிலம் எனும் பெருமை கேரளத்துக்கு கிடைத்த பின்னர் இந்த பயணம். கேரளத்தில் வளர்ந்து வரும் தொழில் துறையின் தன்மையை இது எடுத்துரைக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.