இந்தியாவில் தொழில் தொடங்கு வதற்கு எளிதான தரவரிசையில் (2022-ஆம் ஆண்டுக்கான) கேர ளம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது “கேரளத்தின் வளர்ச்சிக்கு ஊக்க மளிக்கும் என்றும், கடந்த 8 ஆண்டுகளில் தொழில் துறையில் கேரளம் அடைந் துள்ள முன்னேற்றத்தின் பிரதிபலிப்பே இந்த சாதனை” என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”தொழில் தொடங்குவதற்கான நட்புச் சூழலைக் கொண்ட நாடு என்ற வகையில், முதலீட்டாளர்களின் 95 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது கேரளம். அதே தர வரிசைப் பட்டியலின் 2021 பதிப்பில் கேரளா 28ஆவது இடத்தைப் பிடித்தது. ஒரே ஆண்டில் நாம் பதினைந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளோம். பட்டி யலின்படி, கேரளம் 9 குறியீடுகளில் முத லிடத்திலும், இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆந்திரப் பிரதேசம் 5 குறியீடு களில் முதலிடத்திலும் உள்ளது. 3 குறியீடு களில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. தொழில் தொடங்குவதற்கு எளிதான தர வரிசை என்பது தொழில் முனைவோர் சமூகம் அளிக்கும் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் பட்டியலா கும். இந்த நம்பிக்கை தொழில்முனை வோருக்கு கிடைத்துள்ளது. சிறந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சூழலு டன் வளர்ந்த சமுதாயமாக நாம் மாற வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.