states

img

நிதி உதவியை தீவிரப்படுத்த கேரள முதல்வர் உத்தரவு

திருவனந்தபுரம், அக்.19- மழையால் ஏற்பட்டுள்ள துய ரங்களைத் தொடர்ந்து நிதி உதவி விநி யோகத்தை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மழை மற்றும் அணைகளின் நீர் மட்டத்தை மதிப்பிடுவதற்காக செவ்வாயன்று (அக்.19) நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டது. பயிர்ச் சேத விவரங்களை முழுமையாக பெற வேண்டும். சரியான நேரத்தில் தலை யிடுவதை உறுதி செய்ய மீட்பு  நட வடிக்கைகள் மற்றும் முன்னெச்ச ரிக்கைகள் கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். நிவாரண முகாம்களில் போதுமான வசதி கள் இருக்க வேண்டும். உணவு, உடை மற்றும் படுக்கை வசதிகள் வழங்கப் பட வேண்டும். வருவாய் துறை தவிர, உள்ளாட்சி அமைப்புகளும் இதை கவ னத்தில் கொள்ள வேண்டும். உள்ளூர் சமூகங்களின் உதவியையும் பெறலாம். காணாமல் போனவர்களை தேடு தல் உட்பட மீட்பு நடவடிக்கையில் ஒன்றிய மற்றும் மாநில நிறு வனங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து செயல்படுவதாக கூட்டம் மதிப்பிட்டது.

நிலச்சரிவு ஏற்படும் பகுதி களில் இருந்து மக்கள் வெளியேற்றப் பட வேண்டும். மண்சரிவு, நிலச்சரிவு களுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை கட்டாயமாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். குறிப்பிட்ட அளவு தண்ணீருக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம்.  புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை எதிர் பார்க்கப்படுகிறது. பருவமழை வருகையை வானிலை ஆய்வு மையம் இன்னும் மதிப்பிடவில்லை. ஆனால், நான்கு வருட கணக்கு களின்படி கேரளத்தில் கிடைக்க வேண்டிய 84 சதவிகிதம் மழையும் அக்டோபரின் முதல் 17 நாட்களில் கிடைத்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பருவமழையும் சூறா வளிக் காற்றும் நீடிப்பதால், இந்த முறை குறைந்த அழுத்தங்கள் மற்றும் சூறாவளிகள் மேலும் எதிர்பார்க்கப் படுவதாக கூட்டம் மதிப்பிட்டது.  வருவாய் மற்றும் மின் துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செய லாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீட்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு

கேரள நிலச்சரிவுகளில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இறந்தவர்களின் இறுதி நிகழ்ச்சிகளுக்கு தலா ரூ.10,000 அவசர நிவாரணமாக வழங்கப்பட்டது. நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 6 பேரை பலிகொடுத்த காவாலிருந்து 300 பேர் நான்கு நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். கோட்டயத்தில் 40 முகாம்கள் உள்ளன. இங்கு 439 குடும்பங்களில் இருந்து 1706 பேர் தங்க வைக்கப்பட்டனர். முண்டக்காயத்தில் அமைச்சர் வி.என்.வாசவன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

9803.21 எக்டேர் பயிர்கள் நாசம்

கேரளத்தில் கடந்த 4 நாட்களில் பெய்த கனமழையால் 9803.21 ஹெக்டேர் பயிர்கள் அழிந்துள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. 56,003 விவசாயிகளின் பண்ணைகளில் சேதம் ஏற்பட்டது. இழப்பு 17,522.6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1006.85 எக்டேர் வாழை தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. 3989 எக்டேர் நெல்லும் நாசமடைந்துள்ளது. கோட்டயம் மாவட்டம் (1933.67 எக்டேர்), எர்ணாகுளம் (1673.26), திருச்சூர் (1521.74), ஆலப்புழா (-1276.15), பாலக்காடு (1184.88 எக்டேர்) மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

;