திருவனந்தபுரம் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை நியாயமா கவும், சமச்சீராகவும் வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்; நிதி ஒதுக்கீட்டில் பாகு பாடு காட்டாமல் கூட்டாட்சி முறையை ஏற்று ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்று, திருவனந்தபுரத் தில் நடைபெற்ற 5 மாநில நிதியமைச் சர்களின் மாநாடு வலியுறுத்தி யுள்ளது.
நிதிப் பாகுபாடு விஷயம் குறித்து, ஒன்றிய நிதிக்குழுவுடன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உரையாடுவது, நிதிப் பாகுபாட்டிற்கு எதிராக 5 மாநிலங்களும் இணைந்து செயல் படுவது என்றும் இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஹயாட் ரீஜென்சியில் கடந்த வியாழ னன்று (செப்.12) ஐந்து மாநில நிதி யமைச்சர்களின் மாநாடு நடை பெற்றது. இம்மாநாட்டில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், தெலுங்கா னா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட னர்.
ஒன்றிய அரசின் 16-ஆவது நிதிக் குழுவுக்கு முன்னதாக, தங்களுக்குள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக, 5 மாநில நிதிய மைச்சர்களும் திருவனந்தபுரம் மாநாட்டில் கூடினர்.
குறைந்து வரும் வரிப் பகிர்வு
கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநாட்டை (கான்கிளேவ்) துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, “கடந்த பத்து ஆண்டு களில் கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் வரிகள் மூலம் ஒன்றிய அரசின் வரி வருவாயில் பெரும் உயர்வு ஏற் பட்டுள்ளது; இது ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் ஐந்தில் ஒரு பங்காக மாறியிருக்கிறது. அதே நேரம், கேரளத்திற்கான வரிப் பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. 11-ஆவது நிதி ஆணையத்தின் போது 3.05 சதவிகிதமாக இருந்தது, 15-ஆவது நிதி ஆணையத்தின் போது 1.92 சதவிகிதமாக குறைந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் மற்ற மாநி லங்களுக்கும் இதே அனுபவம் உண்டு. மாநிலங்கள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகளுக்கு நிபந்தனை யின்றி நிதி கிடைப்பது முக்கியம்” என்று பினராயி விஜயன் கூறினார்.
மாநாட்டுக்கு அமைச்சர் கே.என். பாலகோபால் தலைமை வகித்தார். மாநாட்டை ஏற்பாடு செய்ய கேரளா எடுத்த முன்முயற்சிக்காக மற்ற மாநில அமைச்சர்கள் பாராட்டினர். கேரளத்தை முன்மாதிரியாகக் கொண்டு பாரபட்சத்தை எதிர்கொள் ளும் மாநிலங்களை ஒன்றிணைத்து பெங்களூருவில் அடுத்த மாநாடு நடத்தப்படும் என்று கர்நாடகா வரு வாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைர கவுடா தெரிவித்துள்ளார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், தெலுங்கானா துணை முதல்வர் பாட்டி விக்ரமாதித்ய மல்லு, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென் னரசு, பஞ்சாப் நிதியமைச்சர் சர்தார் ஹர்பால் சிங் சீமா ஆகியோர் பேசி னர். கேரள தலைமைச் செயலர் சாரதா முரளிதரன் வரவேற்றார், நிதிச் செயலர் (செலவு) கேசவேந்திர ராவ் நன்றி கூறினார்.
வருவாயை ஒன்றியம் கைப்பற்றுகிறது: தமிழ்நாடு
மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “சமூக நலன் மற்றும் பொதுப்பணி கள் அனைத்தையும் மாநிலங்களி டமே ஒப்படைத்துள்ள ஒன்றிய அரசு, வருவாயில் பெரும்பகுதியை வைத்தி ருப்பதால், மாநிலங்கள் நெருக்கடி யில் உள்ளன. செஸ் மற்றும் கூடு தல் கட்டணம் மூலம் அதிக நிதி வசூ லிக்கும் ஒன்றிய அரசு, மாநிலங்க ளுக்கான பங்கை வழங்குவதில்லை. அதேபோல, ஒன்றிய நிதியுதவித் திட்டங்களுக்கு மாநிலங்கள் அதிக பங்கு செலுத்த வேண்டும் என்று கட்டா யப்படுத்தப்படுகிறது. வளங்களின் பயன்பாட்டை, திறமையற்ற பகுதிக ளுக்கு அதிக முக்கியத்துவம் கொ டுத்து மறுபகிர்வு செய்கிறோம் என்ற பெயரில், சிறப்பாக செயல்படும் பகுதிகளின் வளர்ச்சியைத் தடுப்பது சரியல்ல!” என்றார்.
கர்நாடகத்திற்கு ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பு
சமூக நீதி மற்றும் சமத்துவத்திற் கான வேட்கையாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது என்று கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைர கவுடா தெரிவித்தார். “நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தி, வரி வருவாய் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மாநிலம் கர்நாடகா. ஒன்றியத்தில் செலுத் தப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 40 ரூபாயே திரும்பப் பெறப்படுகிறது. தேவைப்படுவது நியாயமான பங்கு. அவ்வாறு பங்கை வழங்காததால், கர்நாடகாவுக்கு ஆண்டுக்கு ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது” என்று கவுடா குறிப்பிட்டார்.
பஞ்சாப்பிற்கு ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு
பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா பேசுகையில், “சமூக மற்றும் மேம்பாட்டுத் திட்ட செலவுகள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு மாநி லங்கள் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக உள்ளது. மொத்த செல வினத்தில் ஒன்றிய அரசை விட மாநி லங்கள் பெரும் பங்கை ஏற்கின்றன. ஜிஎஸ்டி, ஒரு முக்கியமான சீர்தி ருத்தம் என்றாலும், மாநிலங்களின் நிதி சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது. ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாப் ரூ. 20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சந்திக்கிறது” என்றார்.
உயர் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள்
பல்வேறு மாநிலங்களின் நிதித் துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்ட சிறப்பு அமர்வில், ஒன்றிய அரசின் முன்னாள் பொரு ளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார்.
தெலுங்கானா சிறப்பு தலை மைச் செயலாளர் கே.ராமகிருஷ்ண ராவ், கர்நாடகா கூடுதல் தலைமைச் செயலாளர் எல்.கே. அதீக், தமிழ் நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், பஞ்சாப் நிதித்துறை முதன்மைச் செயலாளர் அஜோய்குமார் சின்ஹா, கேரள முன்னாள் நிதிய மைச்சர் டி.எம். தாமஸ் ஐசக், மாநில திட்டக் குழும துணைத் தலைவர் பேராசிரியர்- டாக்டர் வி.கே. ராமச் சந்திரன், முதல்வரின் முதன்மை தலைமைச் செயலாளர் கே.எம். ஆபிரகாம், முன்னாள் ஒன்றிய அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர், 4ஆவது மாநில நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ. உம்மன், 16-ஆவது நிதிக் குழுவின் முன் கேரளம் சமர்ப்பிக் கும் மனுவின் வரைவைத் தயாரிப்ப தற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் பிரபாத் பட்நாயக். சிபி சந்திரசேகர், டாக்டர் ஜெயதி கோஷ், டாக்டர் சுஷில் கண்ணா, 14- ஆவது நிதி ஆணையத்தின் உறுப்பி னர்கள் டாக்டர் சுதிப்தோ மண்டல், டாக்டர் எம். கோவிந்த ராவ், 12-ஆவது நிதி ஆணையத்தின் உறுப்பினர் டி.கே. ஸ்ரீவஸ்தவா, ராம் மனோகர் ரெட்டி, ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதி காரி ஆர். மோகன், டாக்டர் பினாகி சக்ரவர்த்தி, பேராசிரியர் கே.என். ஹரி லால், சிடிஎஸ் இயக்குநர் முனைவர் சி.வீரமணி, கே.ஜே. ஜோசப், என்ஐ பிஎப்பி-யின் பேராசிரியர் லேகா சக்ர பர்தி, கேரள வேளாண் பல்கலைக்கழ கத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் பி. ஷாஹினா, சமூக - பொரு ளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு களுக்கான கொச்சி மையத்தின் ராக்கி திமோதி உள்ளிட்டோர் அமர்வு களில் பங்கேற்றனர்.