states

img

பெண்கள் நட்பு சுற்றுலா, அடிப்படை வசதிகள் சர்வதேச தரத்துடன் கேரளாவின் 8 இடங்கள்

கேரளத்தில் உள்ள எட்டு சுற்று லாத் தலங்கள், பெண்கள் நட்பு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகத் தரத்தைக் கொண்டுள்ளன. குமரகம் (98.72 %), கண்ணூர் கோட்டை (93.95), பினராயி (89.74), அடைக்கலாய் (88.46),  பையாம்பலம் கடற்கரை (87.18), அஞ்ச ரகண்டி (82.05), மூணாறு (79.49), காந்தல் லூர் (73 %) ஆகிய எட்டு இடங்கள் தரவரிசையில் இடம்பிடித்து உள்ளன.

சுற்றுலாத் துறையில் நடத்தப்பட்ட உலகின் முதல் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தணிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.

இரிங்கல் கைவினைக் கிராமம் (69.23%),  கொல்லம் சாம்பிராணிகோடி (67.95%), கோவளம் கடற்கரை மற்றும் கலங்கரை விளக்கம் (66.67%), ஃபோர்ட் கொச்சி (65.38%), தேக்கடி (64.10%), கோழிக் கோடு நெல்யாடி (60.26%), புன்னமடா ஃபிஷ்சிங். 97%), கொல்லம் தென்மலா  (57.69 %)  என அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. ஆய்வு நடத்திய 72 மையங்க ளில் 25க்கும் மேற்பட்டவை 50 சதவிகி தத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளன.