states

img

வயநாடுக்கு ரூ.3 கோடி நிதியுதவி நடிகர் மோகன்லால் வழங்கினார்

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய வர்களை மீட்கும் பணி 5ஆவது  நாளாகத் தொடர்ந்து நடை பெற்று வரும் நிலையில், சனியன்று முண்டக்கையில் பகுதிகளில் நடை பெறும் மீட்புப் பணிகளை மலையாள திரைக்கலைஞரும், ராணுவத்தில் கவு ரவ பதவியில் உள்ளவருமான மோகன்  லால் ராணுவ சீருடையில் சென்று பார்வையிட்டார். 

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்  பில் மோகன்லால்,”தனது விஸ்வ சாந்தி அறக்கட்டளை மூலம் நிலச்சரி வால் பாதிக்கப்பட்ட மறுவாழ்வுப் பணி களுக்காக ரூ.3 கோடி நன்கொடை அளிக்கிறேன். மேலும் கேரள முத லமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (சிஎம்டிஆர்எப்) ரூ.25 லட்சமும், தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்க தயாராக உள்ளேன்” என அவர் கூறி னார்.

கர்நாடக அரசு 100 வீடு

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்காக கர்நாடக அரசு சார்பில் 100 வீடு கள் கட்டி கொடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக  தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர்  கூறுகையில்,”வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் கேரளாவுக்கு ஆதரவாக  கர்நாடகா அரசு நிற்கிறது. கர்நாடக அரசு  சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று  கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம்  உறுதியளித்துள்ளேன். ஒன்றாக இணைந்து நம்பிக்கையை கட்டி யெழுப்பி மீட்டெடுப்போம்” என அவர்  தெரிவித்துள்ளார்.