states

img

தோல்வி பயத்தால் வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் பாஜக

குஜராத் மாநிலம் சூரத்  தொகுதியில் பாஜக  வேட்பாளர் முகேஷ்  தலால், காங்கிரஸ் கட்சியின்  நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ்  கட்சியின் பியாரேலால் பாரதி உட்  பட 8 பேர் வேட்பு மனுத்தாக்கல்  செய்திருந்தனர். வேட்புமனு குளறு படி என்று கூறி காங்கிரஸ் வேட்பா ளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்  நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் பகுஜன் சமாஜ் உள்  ளிட்ட 8 வேட்பாளர்கள் தங்களது  வேட்பு மனுக்களை வாபஸ் பெற்று விட்டதாகவும் இதனால் பாஜக  வேட்பாளர் முகேஷ் தலால் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டதாக வும் அறிவிக்கப்பட்டது.

மக்கள் துரோ

இந்த சம்பவத்திற்கு நாடு முழு வதும் கடும் கண்டனம் கிளம்பிய நிலையில், வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக நிலேஷ் கூறி னார். ஆனால் செவ்வாயன்று காலை முதல் நிலேஷ் கும்பானி தலைமறைவாகி விட்டார். அவரை  காங்கிரஸ் கட்சியினர் போனில் தொடர்பு கொள்ள முயன்ற பொழுது, தொடர்பு கொள்ள முடியவில்லை. நிலேஷ் வீடும் பூட்டப்பட்டு இருந்  தது. இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் நிலேஷ் வீட்டை முற்றுகையிட்டு அவரது வீட்டில்  “மக்கள் துரோகி” என்று எழுதப் பட்ட போஸ்டரை ஒட்டினர்.

இந்நிலையில், நிலேஷ் கும்  பானி பாஜகவில் இணைய உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தோல்வி பயத்தால் காங்கிரஸ் வேட்பாளரை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது வெளிச்  சத்திற்கு வந்துள்ளது. எதிர்க்கட்சி  வேட்பாளர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்து அதி கார அரசியல் பிழைப்பு நடத்திய  காலம் சென்று, தற்போது வேட்பா ளரையே விலைக்கு வாங்கும் அளவிற்கு கீழ்த்தரமான வேலை யில் பாஜக இறங்கியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோடி மேற்பார்வையில் எதிர்க்கட்சியினரை இழுக்கும் வேலையில் இறங்கிய பாஜக

கடந்த ஏப்ரல் 20 அன்று மகா ராஷ்டிராவில் நான்டெட் டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட் டத்தில் பிரதமர் மோடி,”கடந்த 2019இல் உத்தரப்பிரதேச மாநி லம் அமேதி தொகுதியில் காங்கி ரஸ் தோல்வியை சந்தித்தது. இப்போது வயநாடு தொகுதி யில் மீண்டும் போட்டியிடுகிறார் கள். நான் சொல்கிறேன், இந்த  முறை வயநாட்டில் தோல்விய டைந்து வேறு ஒரு தொகுதியை  காங்கிரஸ் தேட வேண்டி இருக்  கும்” எனக் கூறினார். அதாவது  வயநாட்டில் ராகுல் தோல்வி யை சந்திப்பார் என மறைமுக மாக பிரதமர் மோடி கூறினார். 

மோடி கூறிய அடுத்த 10  மணிநேரத்தில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுதாகரன் திடீரென கட்சியில் இருந்து விலகி ஏப்ரல் 21 அன்று  இரவு பாஜகவில் இணைந்தார். ராகுல் காந்தியை தோற்கடிக்க வயநாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவரை தங்கள் பக்கம் இழுப்பது பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே தெரிந்த விஷய மாக இருந்துள்ளது. வயநாட் டில் ராகுல் காந்தி தோற்பார் என்று கூறிய அடுத்த சில நிமி டங்களில் சுதாகரன் பாஜகவில்  இணைந்துள்ளார். இது பலத்த  சந்தேகங்களை கிளம்பியுள்ளது. 

மகாராஷ்டிராவிலும்...
இதே போல 2 மாதங்க ளுக்கு முன்பு மகாராஷ்டிரா வில் சொந்த கட்சியினருக்கே காங்கிரஸ் மரியாதை அளிப் பது இல்லை என கூறினார்.  அடுத்த 24 மணிநேரத்தில் காங்  கிரஸ் மூத்த தலைவரும், முன்  னாள் முதல்வருமான அசோக்  சவான் திடீரென பாஜகவில்  ஐக்கியமானார். இதன்மூலம்  பாஜகவினர் எதிர்க்கட்சியி னரை இழுக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

;