கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ மனையில், மருத்துவம் பயின்று வந்த முதுநிலை மாணவி கடந்த மாதம் பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி தற்போது வரை போராட் டம் நடைபெற்று வருகிறது. இப்பிரச்சனை யில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கையாண்ட விதம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த மாதம் திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து சேகர் ரே,”எனக்கும் மகள்கள், பேத்திகள் உள்ளனர்.மருத்துவ மாணவி வன்கொலை தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட நடவடிக்கை தவறாக உள்ளது” என கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், சுவேந்து சேகர் போன்று மாணவி வன்கொலைக்கு எதிர்ப்பு தெரி வித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான ஜவ்கர் சிர்கார் தனது கட்சி மற்றும் எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கூறி மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,”எனது இத்தனை ஆண்டு அரசியல் அனுபவத்தில், அர சாங்கத்துக்கு எதிராக இந்த அளவுக்கான எதிர்ப்பு மற்றும் நம்பிக்கையின்மையை நான் பார்த்ததே இல்லை. அதனால் இனி யும் நான் எம்.பி.யாக தொடர விரும்ப வில்லை. மோதலுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறையை கட்சி எடுக்காவிட்டால், மாநிலத்தை வகுப்புவாத சக்திகள் கைப் பற்றும்” என்று தெரிவித்துள்ளார்.