புதுக்கோட்டை, ஜுலை 12- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவ காரத்தில், நான்கு சிறார்களுக்கு டிஎன்ஏ பரி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன் கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட நான்கு சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் புதன் கிழமை ஆஜராகினர். அப்போது, இந்த நான்கு சிறார்களுக்கு மட்டும் ஏன் டிஎன்ஏ பரிசோதனை மேற் கொள்ள வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஜூலை 14 அன்று இது தொடர்பாக விசாரணை நடைபெறும் எனக் கூறி வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.