புதுக்கோட்டை, அக்.5 - மதுரை ரயில்வே கோட்டத்தில் அம்ரித் திட்டத்தின்கீழ் 15 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள், அடுத்த ஆண்டில் நிறைவடையும் என்றார் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வர்ஷவா. புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அம்ரித் திட்டத்தின்கீழ் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வரும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி களை வெள்ளிக்கிழமை நேரில் பார்வை யிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மதுரை ரயில்வே கோட்டத்தில் அம்ரித் திட்டத்தின்கீழ் 15 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்தப் பணிகளை அடுத்த ஆண்டுக் குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாம்ப னில் புதிதாக அமைக்கப்பட்ட தூக்கு பாலப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் முடிந்துள்ளது. பாதுகாப்பு குறித்த ஆய்வு கள் முடிந்ததும் பாலம் திறக்கப்படும். தீபாவளிக்கு தென்னக ரயில்வே சார்பில் கூடுதல் ரயில்களை இயக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. அதேபோல மதுரை கோட்டத்தி லும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களை புதுக் கோட்டை வழியாக இயக்குவதற்கு ஆலோ சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.