states

பெண்ணடிமைத்தனத்தையும் “மூட நம்பிக்கையையும் பரப்பும் செயல்”

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம் பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில்   மகாவிஷ்ணு என்னும் பேச்சாளர் தன்னம்பிக்கை வளர்ப்பதற்கு பதிலாக மூடநம்பிக்கை கருத்துக்களை மாணவி களிடம் விதைக்கும் வண்ணம் பேசி உள்ளார்.  அவர் பேசிய கருத்துக்கள் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்புடைய கருத்தாக இல்லாமல் மூடநம்பிக்கைகளை பரப்பும் செயலாக உள்ளது. மாணவிகள் அழகாக இல்லாத தற்கு கடந்த பிறவியில் செய்த பாவம் தான் காரணம் என்று பேசி உள்ளார். பெண்ணடிமை தனத்தையும் மூடத் தனத்தையும் ஒரு சேர விதைக்கும் இத்தகைய நபர்கள் மீது தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் கடுமையான நடவடிக்கை களை எடுத்திட வேண்டும். அரசு பள்ளிகளில் நடக்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் குறித்து பள்ளிக்கல்வி துறை கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். மூடநம்பிக்கை அறிவியலுக்கு புறம்பான கருத்துக்கள் பெண் அடிமை கருத்துக்கள் ஒருபோதும் பள்ளிகளில் அனுமதிக்க முடியாது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். சங்கத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோரின் அறிக்கை.