கர்நாடக அரசு, ஐ.டி.நிறுவனங் களை, தொழில் நிறுவனங்கள் (நிலையாணைகள்) சட்டத்திலிருந்து மேலும் ஐந்தாண்டுகளுக்கு விதிவிலக்கு அளித்து அறிவிக்கை வெளியிட்டிருப்பதற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு-வின் பொதுச் செயலாளர் தபன்சென் ஓர் அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐ.டி.நிறு வனங்களுக்கு, தொழில் நிறுவனங்கள் (நிலையாணைகள்) சட்டத்திலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக விதிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து ஜூன் 10ஆம் தேதியன்று கர்நாடக அரசு ஓர் அறிவிக்கையை வெளி யிட்டிருக்கிறது. தொழிற்சங்கங்கள் இதற்குக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ள போதிலும் அதனை மீறி இவ்வாறு கர்நாடக அரசு நடந்து கொண்டுள்ளது. இவ்வாறு மீண்டும் விதிவிலக்கு அளித்திருப்பதற்கு சிஐ டியு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள் கிறது.
போராடும் ஐ.டி. ஊழியர்களுக்கு ஆதரவு
இந்த அறிவிக்கையை கர்நாடக அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு விலக்களித்திருப்பதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் ஐ.டி.ஊழியர் களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து அவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று சிஐடியு தன்கீழ் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு விதிவிலக்கு அளித்திருப் பதை எதிர்த்து கர்நாடக ஐ.டி.ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது. இப்போது மீண்டும் விலக்கு அளித்திருப்பது என்பது கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் ஊழியர் விரோதக் கொள்கைகளையே காட்டுகிறது. ஊழியர்களின் குறைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்புகார்கள் குழு, குறைகள் சரிசெய்யும் குழு அளித்திடும் புகார்கள் குறித்து ஐ.டி.முதலாளிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் போது அது எதையும் கண்டுகொள்ளாமல் தன் கண்களை மூடிக்கொள்கிறது.
உறுதிமொழியை மீறிய கர்நாடக அரசு
இந்நிலையில் இப்போது இவ்வாறு விதிவிலக்கு அளித்திருப்பதை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து அறிவிக்கை வெளியிட்டிருப்பது, மாநில அரசின் முத லாளிகள் ஆதரவு அணுகுமுறையையே காட்டுகிறது. விதிவிலக்கு அளிப்பது தொடர்பாக 2024 மார்ச் மாதத்தில் நடை பெற்ற முத்தரப்பு மாநாட்டில் கர்நாடக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஓர் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்த வுடனேயே அந்த உறுதிமொழி அரசால் மீறப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசின் இத்தகைய வெட்கக்கேடான ஊழியர் விரோதப் போக்கை சிஐடியு கண்டிக்கிறது. இவ்வாறு விதிவிலக்கு அளித்து வெளியிடப்பட்டுள்ள ஆணைகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோரு கிறது. இந்தப் பிரச்சனை மீது போராடிக் கொண்டிருக்கும் ஐ.டி.ஊழியர்களுக்கு தன் முழு ஆதரவினையும் சிஐடியு விரிவாக்கிக்கொள்கிறது. இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கூறியுள்ளார். (ந.நி.)