states

செங்கிப்பட்டியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் வெற்றி

தஞ்சாவூர், அக்.5 - செங்கிப்பட்டியில் விவசாயிகள் நடத்திய  காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டையில் இருந்து தண்ணீர் திறந்து இரண்டு மாதங்கள் கடந்தும், புதிய கட்டளை  மேட்டு வாய்க்காலிலும், உய்யக்கொண் டான் நீட்டிப்பு வாய்க்காலிலும், பாசனத் திற்கு தண்ணீர் தராததைக் கண்டித்தும், உடனே தொடர்ச்சியாக தண்ணீர் வழங்கி விவ சாயிகள் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தியும், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி கட்டளை மேட்டுக் கால்வாயில், புதிய  கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண் டான் மேட்டு வாய்க்கால் பாசன விவசாயி கள் சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம்  வியாழக்கிழமை தொடங்கியது.  இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரையிலும் இப்போராட்டம் நீடித்தது.  போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். இதில், அதி முக முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசாமி, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள்  எம்எல்ஏவுமான ரெங்கசாமி, தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன்,  மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பாஸ்கர், தமிழரசன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், வி.தொ.ச மாவட்ட நிர்வாகி வெ.ஜீவகுமார், தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் ராமச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இதையடுத்து திருச்சி பாசனக் கோட்ட எஸ்.டி.ஓ ராஜரத்தினம், பூதலூர்  வட்டாட்சியர் மரிய ஜோசப், பூதலூர் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை அருகே கருங்காலப்பள்ளியில் தண்ணீர் திறந்து விட இடையூறாக இருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டு, தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முழு கொள்ளளவு தண்ணீர் பாசனத்திற்கு விரை வில் திறந்து விடப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர்.  இதையடுத்து விவசாயிகள் போராட் டத்தை விலக்கிக் கொண்டனர்.