ஒரு தனி நபர் ஒரு பெண்ணை பொது இடத்தில், பிறர் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முடியும்? சிபிஐ குற்றப்பத்திரிகையில் இதுதொடர்பாக சாதாரண குறிப்புகள் கூட இல்லை. மாநில அரசாங்கத்தின் பாதையிலேயே சிபிஐ விசாரணை மேற்கொண் டுள்ளது. அதனால் தான் கொல்கத்தா மாணவி படுகொலை விவ காரத்தில் வழங்கப்பட்ட தண்டனை திருப்தியற்றதாக உள்ளது.
சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. கொல்கத்தா காவல்துறை யினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை கள், சிபிஐயிடம் சமர்ப்பிக்கப்பட்டன. விசாரணை யில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே, குற்ற வாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கும் நீதியை வழங்க போதுமான தண்டனை வழங்கப்படவில்லை. ஆனால் இந்த தண்டனை போதாது.
2014 இல் பிரதமர் மோடி பதவியேற்றபோது பாஜக நிறைய வாக்குறுதிகளை அளித்தது. இதே போல தில்லி தேர்தலுக்காக மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். பாஜக உண்மையில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்பதை கூறும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம்.
தமிழ் நடிகை தேவயானி இயக்கிய “கைக்குட்டை ராணி” எனும் குறும்படம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்போர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
“மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக் கின் தீர்ப்பை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதில் நிலையாக இருந் தோம். ஆனால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள் ளது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தி இல்லை” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி யுள்ளார்.
தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழ்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க உறுதி யான நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய சுகாதா ரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் தில்லி முதல்வர் அதிஷிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புதுதில்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தேர்தல் ஆணையத்தி டம் புகார் அளித்துள்ளார். புதுதில்லி தொகுதியில் தான் கெஜ்ரிவாலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பி டத்தக்கது.
தமிழ்நாட்டைச் (சென்னை) சேர்ந்த பக்தர் வர்த மான் ஜெயின் என்பவர் திருப்பதி தேவஸ்தானத்து க்கு ரூ. 6 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.