ஸ்ரீநகர் நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் “இந்தி யா” கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி (42 தொகு திகள்), காங்கிரஸ் (6 தொகுதி கள்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (1) ஆகிய கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி 49 தொகுதி களை கைப்பற்றிய நிலையில், பாஜக 29 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீ ரில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க “கோடி மீடியா” ஊடகங்கள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. “இந்தியா” கூட்டணியில் அதிக தொகுதியை வென்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலை யில், உமர் அப்துல்லாவின் ஆட்சி க்கு 4 சுயேச்சைகள், ஆம் ஆத்மி யின் ஒரு எம்எல்ஏ என 5 எம் எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீரில் “இந்தியா” கூட்டணி பலத்தின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
நியமன எம்எல்ஏக்கள் (5 பேர்) மூலமும், சுயேச்சை மற்றும் மெக பூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி யின் எம்எல்ஏக்களை வளைத்து குறுக்கு வழியில் ஆட்சியை கைப் பற்ற பாஜக திட்டம் தீட்டி வருவ தாக தகவல் வெளியாகி வந்தன. ஆனால் சுயேச்சை எம்எல்ஏக்க ளில் 4 பேர் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளதால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதன் காரணமாகவே “கோடி மீடியா” மூலம் பாஜக குழப்பத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது.
“இந்தியா” கூட்டணியில் பிளவாம்
சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதர வால் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆதரவு தேவையில்லை என்றும், அதனால் காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் எந்த நேரத்திலும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கான ஆத ரவை வாபஸ் பெறலாம் என்றும் பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதாவது காங்கிரஸ், சிபிஎம் ஆதரவு இன்றி சுயேச்சை கள் மூலம் ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்றத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி 46 எம்எல்ஏக்களைப் (பெரும் பான்மைக்கு தேவையான இடம்) பெற்றுள்ளது. அதனால் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளால் “இந்தியா” கூட்டணி உடையலாம் என்பதே “கோடி மீடியா” ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் ஆகும்.
“கோடி மீடியா” ஊடகங்க ளுக்கு காங்கிரஸ் பதிலடி
“கோடி மீடியா” ஊடகங்க ளின் புரளிகளுக்கு மத்தியில் வெள்ளியன்று காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வ ராக செயல்பட ஆதரவு அளிப்ப தாக அறிவித்து, அதற்கான உடன் பாடையும் ஒப்படைத்தது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் “இந்தியா” கூட்டணியில் பிளவு இல்லை என்பதை தங்களது செய ல்பாடுகள் மூலம் பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்களுக்கு காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி பதிலடி கொடுத்துள்ளன.