states

img

இந்தியப் பொருளாதாரம் 10 ஆண்டுக்கு 7 சதவிகித வளர்ச்சிக்கு குறையாது!

மும்பை, செப்.21- நடப்பு நிதியாண்டில், பொருளா தார வளர்ச்சி 7 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும்; அத்துடன் இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு 7 சத விகித வளர்ச்சிக்கு குறையாது என்று ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றுப் பரவல், உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்தம் போன்றவைகளால் ஏற்பட்டு ள்ள பின்விளைவுகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இவை வளர்ச்சியைப் பாதிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் வெளி யிடப்பட்ட பொருளாதார ஆய்வறி க்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டது. இந்நிலையில், விரைவில் இதன் மறுமதிப்பீடு இறங்குமுகமாக இருக்கும் என்று சில ஆய்வாளர் கள் தெரிவிக்கின்றனர். அதன் படியே கடந்த ஜனவரி மாதம் பொரு ளாதார வளர்ச்சி குறித்து மேற்கொ ள்ளப்பட்ட மதிப்பீடு தற்போது சரிந்துள்ளது. அந்த வகையில், 2022-23 நிதி யாண்டில் பொருளாதார வளர்ச்சி 7  சதவிகிதத்துக்கும் அதிகமாக இரு க்கும். மேலும் 10 ஆண்டுகளுக்கு பொருளாதார வளர்ச்சியை 7 சத விகிதமாகத் தக்கவைக்கும் வகை யில், இந்தியா நல்ல நிலையில் உள்ளது. இவ்வாறு அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.