மணிப்பூரில் தொடர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் அமைதியை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, ஜான் பிரிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் பினோய் விஸ்வம், மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ்குமார், மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோர் கொண்ட குழு, மணிப்பூரில் கடுமையாக பாதிப்புக்குள்ளான மக்கள் அதிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள சூரசந்த்பூர் பகுதிக்கு வெள்ளியன்று சென்றனர். அப்பகுதியில் மொய்ராங் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள நிவாரண முகாம்களில் மக்களைச் சந்தித்தனர். பிஷன் பூர் மருத்துவமனைக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். பின்னர் ஆளுநரையும் சந்தித்தனர்.