‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிராக, பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு கொண்டுவந்த தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ தகர்த்து விடும் என்பதால், இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர் பாக, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 191 நாட்கள் ஆய்வுப் பணி களை மேற்கொண்டதாகவும், அந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட அறிக்கை என்றும் கூறி, சுமார் 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை தற்போதைய குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடம் 2024 மார்ச் 14 அன்று நேரில் வழங்கியது. அதில், “2029-ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம். மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று கூறியிருந்தது. இதற்கு ஒன்றிய பாஜக அரசின் அமைச்சரவையும் கடந்த செப்டம்பர் 18 அன்று ஒப்புதலும் அளித்தது.
இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் சார்பில் மாநில நாடாளுமன்ற விவ காரத்துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ், தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
அப்போது, “கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும். இந்த திட்டம், நாட்டில் உள்ள பல்வேறு மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலத்தை குறைக்கவும் வழிவகுக்கும். முதற் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு மக்களின் ஆணையை மீறுவதாகவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சவால் விடுவதாகவும் உள்ளது. மக்களவை, மாநில சட்டப் பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல் களை ஒரு செலவாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பார்க்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேர்தல் செலவுகளைக் குறைப்ப தற்கும், நிர்வாகத்தை திறம்படச் செய்வதற்கும் வேறு எளிய வழிகள் இருப்பதால் இது கண்டனத்திற்குரிய நடவடிக்கை” என்று எம்.பி. ராஜேஷ் கூறினார்.
அவர் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் சில திருத்தங்களை தெரிவித்தன. அந்த திருத்தங்கள் தீர் மானத்தில் இணைத்துக் கொள்ளப் பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிரான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
ஒன்றிய அரசின் முடிவு, மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு களுக்கு சவாலாக உள்ளது. ஒன்றிய அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த முயற்சிக்கிறது. நாடா ளுமன்ற ஜனநாயகத்தின் கழுத்தில் நெருப்பை மூட்டும் இந்த முடிவி லிருந்து ஒன்றிய அரசு உடனடியாக விலக வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.