states

img

ஆம்புலன்சில் பூரம் திருவிழாவுக்கு சென்ற ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

திருச்சூர் பூரம் திருவிழா வுக்கு முறைகேடாக ஆம்  புலன்ஸ் பயணம் மேற் கொண்ட விவகாரத்தில் ஒன் றிய இணை அமைச்சர் சுரேஷ்  கோபி மீது வழக்கு பதிவு செய்  யப்பட்டுள்ளது. விதிகளை மீறி  ஆம்புலன்சில் பயணம் செய்த தாக இந்த வழக்கை திருச்சூர் கிழக்கு போலீசார் பதிவு செய்  தனர்.

உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா அன்று  பூரம் திருவிழா திடலுக்கு சுரேஷ் கோபி ஆம்புலன்சில் வந்து இறங்கும் காட்சிகளும் வெளியாகின. ஆனால், ஆம்பு லன்சில் வந்ததாக கூறுவது  பொய் என்று நடிகரும் அமைச்ச ருமான சுரேஷ்கோபி மறுத்  தார். ஆம்புலன்சில் சென்ற தாக தோன்றியது மாயக்காட்சி என்று சுரேஷ் கோபி பொது இடங்களில் பிரசாரம் செய்து  வந்தார். ஆனால் ஆம்புலன் ஸில் இருந்து தரையிறங்கும் காட்சிகள் மீண்டும் வைரலா னது.

காரில் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து பூரம் திடலை  அடைந்தாகவும், ஆனால் அவ ரது வாகனம் குண்டர்களால் தாக்கப்பட்டதாகவும், அத னால் தான் ஆம்புலன்சில் சென்றதாகவும் ஒருகட்டத்தில் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு கால் வலித்து நடக்க முடி யாமல் ஆம்புலன்சில் வந்த தாகவும் அந்த கதையில் கூடுத லாக சேர்த்தார். ஆனால், பூரம்  முடிந்து பல நாட்கள் ஆன பிற கும் தன்மீது கும்பல் தாக்குதல்  நடந்ததாக சுரேஷ் கோபியோ, பாஜக தலைவர்களோ எங்கும்  கூறவில்லை. போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. பல மாதங்கள் கழித்து, பூரம் திருவிழா விரும்பிகளை அவ மானப்படுத்தும்  பொய்களை  பாஜகவினர் உருவாக்குகிறார் கள்.