states

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11 அமைச்சர்கள் பதவியேற்பு!

ராஞ்சி, டிச. 5 - ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்த லில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

மொத்த முள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதி களை இக்கூட்டணி கைப்பற்றியது. கடந்த நவம்பர் 28 அன்று ஹேமந்த் சோரன்  முதல்வராக பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் அப்போது, பதவியேற்கவில்லை.  இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 11 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சுதிவ்ய குமார், தீபக்  பிருவா, ராம்தாஸ் சோரன், சாம்ரா லிண்டா, யோகேந்திர பிரசாத், ஹபிஜுல் ஹசன் ஆகிய 6 பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீபிகா பாண்டே சிங், ஷில்பி நேஹா டிர்கி, இர்பான் அன்சாரி, ராதாகிருஷ்ண கிஷோர் ஆகிய 4 பேரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் யாதவும் அமைச்சர் களாக பதவியேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், புதிய ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவிப்  பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாண மும் செய்துவைத்தார்.  பதவியேற்புக்குப் பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “காலம் வேகமாகச் செல்வதால், எல்லாம் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் திசை தற்போது முடி வாகி இருக்கிறது. நாங்கள் வேகமாக முன்னேறுவோம்” என்று கூறினார்.