states

img

சிபிஎம் ஜம்மு-காஷ்மீர் மாநிலச் செயலாளராக முகமது அப்பாஸ் தேர்வு

சிபிஎம் ஜம்மு-காஷ்மீர் மாநிலச் செயலாளராக முகமது அப்பாஸ் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்மு-காஷ்மீர் 13ஆவது மாநில மாநாடு ஜம்முவில் உள்ள சீத்தாராம் யெச்சூரி அரங்கில் பிப்ரவரி 17 அன்று பொதுக்கூட்டத்து டன் தொடங்கியது. மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். அதே போன்று அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர். அசோக் தாவ்லே மற்றும் மத்தியக் குழு உறுப்பினரும், 5 முறை எம்எல்ஏவுமான (குல்காம்) முகமது யூசுப் தாரிகாமியும் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றினர். ஜம்மு பகுதி மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய இரு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் மாநாட்டின் பொதுக் கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதி மாநாட்டின் பிரதிநிதிகள் அமர்வு நடைபெற்றது. 251 பிரதிநிதி கள் (காஷ்மீர் - 219, ஜம்மு - 32) கலந்து கொண்ட னர். இதில் 8 பேர் பெண்கள் ஆவர். மாநிலச் செய லாளர் குலாம் நபி மாலிக் மாநாட்டின் அறிக்கை யை சமர்ப்பித்தார். விவாதத்தில் 13 பிரதிநிதிகள் பங்கேற்றனர். முகமது யூசுப் தாரிகாமியின் பதிலுக்குப் பிறகு அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல மாநாட்டில்

1.ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள்,

2.மாநில அந்தஸ்து மறுசீரமைப்பு,

3. வேலையின்மை,

 4. நிலச்சட்டங்கள்,

5. தேசிய கல்விக்கொள்கை க்கு எதிராக,

6. தோட்டக்கலை,

7. காஷ்மீரி குடி யேறியவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் 21 பேர் கொண்ட புதிய மாநிலக்  குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய மாநிலச் செயலாளராக முகமது அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டார். மேலும் மதுரையில் நடை பெறும் அகில இந்திய மாநாட்டிற்கு 4 பிரதிநிதி கள் மற்றும் 2 பார்வையாளர்கள் என 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரகாஷ் காரத் நிறை வுரையாற்றினார். அவர் ஆற்றிய நிறைவுரை யில், “கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கடின மான சூழ்நிலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். தற்போது ஜம்மு-காஷ்மீரில்  அமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஒற்று மையை பராமரிக்கவும் வலுப்படுத்தவும் வேண்டும். மேலும் போராட்டங்களில் அதிக  கவனம் செலுத்த வேண்டும். வரும் காலங் களில் வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்தார்.