ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் குல்காம் சட்ட மன்றத் தொகுதி முழுவதும் செங் கொடி படபடத்துக் கொண்டிருக் கிறது. சட்டமன்றமோ அல்லது வேறு எந்த மேடையோ ஒவ்வொன் றிலும் மக்களின் பிரச்சனைகளைப் பேசும் குல்காம் சட்டமன்றத் தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி தேர்தல் களத்தில் நிற்கிறார்.
பழமைவாதிகளின் பிடியில்
பழமைவாத அரசியல் அமைப்புகளில் களமாக இந்த குல்காம் தொகுதி இருந்தது. குறிப் பாக, ஜமாத்-இ-இஸ்லாமியா இந்தப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருந்தது. 1972இல் முதன் முறையாக நேரடி அரசியலில் இறங்க அந்த அமைப்பு முடிவு செய்தது. அப்போது நடைபெற்ற தேர்தலில் 5 சட்டமன்றத் தொகுதி களில் அவர்கள் வெற்றி பெற்றா ர்கள். அதில் குல்காமும் ஒன்றாகும். தீவிர பழமைவாதியான அப்துல் ரசாக் மீர் இந்தத் தொகுதியின் உறுப்பினராக சட்டமன்றத்திற்குச் சென்றார். 1977இல் மீண்டும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளைக் கைப் பற்றினார்கள். இந்தத் தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அவதாரமான ஜனசங்க த்துடன் கூட்டு சேர்ந்தனர்.
1987இல் மீண்டும் குல்காம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். இந்த அமைப் பின் தலைவர்களில் பெரும்பாலா னவர்கள் குல்காம் பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அருகில் இருந்த ஷோபியன் மற்றும் அனந்தநாக் ஆகிய இடங் களிலும் ஜமாத்-இ-இஸ்லாமியா வின் செல்வாக்கு இருந்தது.
களத்தில் மார்க்சிஸ்டுகள்
மக்கள் பிரச்சனைகளில் கவ னம் செலுத்தாமை, ஜனசங்கத்துட னான நேர்மையற்ற கூட்டு உள்ளி ட்ட பல்வேறு அம்சங்களால் மக்கள் செல்வாக்கைப் பழமைவாதிகள் இழக்கத் தொடங்கினர். 1983இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் முதன்முறையாகக் களமிற ங்கிய முகமது யூசுப் தாரிகாமி 8.48 விழுக்காடு வாக்குகளைப்பெற் றார். பாதிக்கப்படும் மக்களின் உரிமைக்குரலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது. 1987 தேர்தலில் 10.23 விழுக்காடு வாக்கு களை தாரிகாமி பெற்றார். இந்தத் தேர்தலில் பல்வேறு பழமைவாத அமைப்புகள் இணைந்து வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக் கது. அவர்களின் குறி தாரிகாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதுதான் இருந்தது.
1996இல் நிலைமை தலைகீழாக மாறியது. பழமைவாதிகளின் கூட்டு எதிர்ப்பை மக்கள் புறக்க ணித்தனர். 69.65 விழுக்காடு வாக்கு களுடன் தாரிகாமி சட்டமன்ற உறுப்பினரானார். அதன்பின்னர் 2002, 2008 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் தாரிகாமிக்கே வெற்றி கிடைத்தது.
தங்கள் சொந்த அடையா ளத்தைக் களைந்துவிட்டு பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளின் பின்னால் மறைந்து நின்று, பழமைவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் குல்கா மில் செங்கொடியின் தாக்கத்தை மட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது மீண்டும் களத்தில் தாரிகாமி நிற்கிறார்.
அவருடைய வெற்றி நிச்சயம் என்பதைத்தான் தொகுதி முழு வதும் எங்கு நோக்கினாலும் பறந்து கொண்டிருக்கும் செங்கொடிகள் காட்டுகின்றன.