நிமிஷா பிரியாவின் விடுதலைக்கு ஒன்றிய அரசு தலையிட வேண்டும்
உச்சநீதிமன்றத்தில் மனு
புதுதில்லி ஏமன் நாட்டின் குடிமகன் தலால் அபு மஹ்தி கொலை வழக்கில், ஏமன் சிறை யில் தண்டனை அனுபவித்து வரும் கேரளத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியாவை விடுவிக்க ஒன்றிய அரசு உடனடி யாக தலையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “சேவ் நிமிஷா பிரியா” நடவடிக்கை குழு இந்த மனுவை தாக்கல் செய்தது. ஏமன் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16 ஆம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன், தில்லியில் உள்ள மாநில அரசின் சிறப்பு பிரதிநிதி பேரா சிரியர் கே.வி. தாமஸ், மரண தண்டனையை நிறுத்த ஒன்றிய அரசு தலையிடக் கோரி பிரதம ருக்கு கடிதம் எழுதியிருந்தனர். சிபிஎம் மாநி லங்களவைத் தலைவர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி.யும் இதே கோரிக்கையுடன் வெளியுறத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். கொலை செய்யப்பட்ட தலாலின் குடும்பத்தினர் 2017 முதல் சிறையில் இருக்கும் நிமிஷா பிரியாவை விடுவிப்பதற் காக ரூ.8.57 கோடி இழப் பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் அவரை விடு விப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. மரண தண்டனையை நிறைவேற்ற சிறைச்சாலைக்கு உத்தரவு வந்துள்ளதாகவும், சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் இந்த உத்தரவு ஒப்படைக் கப்பட்டுள்ளதாகவும் ஏமன் மனித உரிமை ஆர் வலர் சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். இந்நிலையில் உள்ள ஒரே வழி தலாலின் குடும்பத்தினரை புதன்கிழமை சந்திப்பது தான். நிமிஷா பிரியாவின் தாய் பிரேமகுமாரி சாமு வேலுடன் ஏமனில் உள்ளார். அவர்தனது மகளை சிறையில் ஒருமுறை சந்தித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. நிமிஷா பிரியா பாலக் காட்டின் கொல்லங்கோட்டில் உள்ள தெக்கிஞ்சிரா வைச் சேர்ந்தவர். அவர் தொடுபுழாவைச் சேர்ந்த டாமியை மணந்து, 2012 இல் ஏமனுக்கு ஒரு செவிலியராகச் சென்றார். இதற்கிடையில், அவர் ஏமன் குடிமகனான தலால் அபு மஹ்தியைச் சந்தித்தார், இருவரும் சேர்ந்து ஒரு கிளினிக் தொடங்க முடிவு செய்த னர். நிமிஷா பிரியாவும் அவரது கணவரும் தங்கள் சேமிப்புகள் அனைத்தையும் தலாலி டம் ஒப்படைத்தனர். கிளினிக்கைத் தொடங்கிய பிறகு, நிமிஷா பிரியா தனது மனைவி என்ப தைக் காட்டி போலி திருமணச் சான்றிதழை தலால் தயாரித்தார். அவர்கள் மத சடங்குக ளின்படி திருமணம் செய்து கொண்டனர். தலால் கிளினிக்கிலிருந்து கிடைக்கும் வருமா னம் அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பாஸ்போர்ட்டும் திருடப்பட்டது. அவரிடம் இருந்த தங்கத்தையும் எடுத்து விற்றார். அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகு,தலால் தனக்கு தீங்கு விளைவிக்க முயன்றதாக நிமிஷா பிரியா கூறினார். இந்நிலையில் விஷம் கொடுத்து தலாலை கொன்றதாக நிமிஷா கைதானார்.