states

கர்நாடகாவில் தீவிரமடையும் திடீர் மாரடைப்பு மரணங்கள் ஒரே நாளில் அறிகுறி இல்லாமல் 10 வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் தீவிரமடையும் திடீர் மாரடைப்பு மரணங்கள் ஒரே நாளில் அறிகுறி இல்லாமல்  10 வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு

ஹாசன் மாவட்டத்தில் 40 நாட்களில் 24 பேர் பலியான சோகம்

 

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக ஹாசன், கடக், சாம்ராஜ் நகர், தார்வாட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலு பேட்டை நகரில் உள்ள ஒரு பள்ளியில் புதன் கிழமை அன்று 4 ஆம் வகுப்பு படிக்கும் மனோஜ் குமார் என்ற 10 வயது மாணவன் பள்ளி செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மனோஜ் குமார் மாரடைப்பு  காரணமாக ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 10 வயது சிறுவனுக்கு எப்படி மாரடைப்பு வரும் என பல்வேறு சந்தே கங்கள் கிளம்பியது. குறிப்பாக சிறுவனின் திடீர் மாரடைப்பு மரணத்திற்குப் பின் வெளியான அதிர்ச்சி தகவல்கள் கர்நாடக மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ஹாசனில் மட்டும் 24 பேர்... ஹாசன், கடக், சாம்ராஜ் நகர், தார்வாட் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரத்தில் 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள னர். குறிப்பாக புதனன்று ஒரே நாளில் அறி குறிகள் இல்லாமல் 10 வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்ன வென்றால் ஹாசன் மாவட்டத்தில் 40 நாட்களில் 24 பேர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரி ழந்தது தான். இந்த விஷயம் 10 வயது சிறு வனின் மரணத்திற்கு பிறகு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியா? கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் நாடு முழுவதும் மாரடைப்பு மரணங்கள் அதி கரித்து வருவதாக வாதம் ஒன்று உள்ளது. இத்த கைய சூழலில், கர்நாடகாவில் அதிகரித்து வரும் மாரடைப்பு உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என அம்மாநில கல்வித் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் கூறி யுள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில்,“இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உட்பட பல நிறுவனங்கள் நடத்திய  ஆய்வுகள் மூலம், கர்நாடகாவில் அதிகரித்து வரும் மாரடைப்பு உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் என்று கூற எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாரடைப்பு காரணமாக ஏற்படும் இறப்புகள் பொது சுகாதார அமைப்பு க்கு தெரிவிக்கப்பட வேண்டிய ஒரு அறிவிக்கத் தக்க நோயாக மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதனால் வரும் காலங்களில் மார டைப்பு மரணங்களுக்கு கண்டிப்பாக  பிரேத  பரிசோதனை நடத்தப்படும். இதன் மூலம்  இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும். 40 நாட்களில் 24 பேர் திடீர் மாரடைப்பு காரண மாக உயிரிழந்துள்ள ஹாசன் மாவட்டத்தில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை  கிடைத்த பிறகு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என அவர் கூறினார்.

மைசூரில் பதற்றமான சூழல்

கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரான மைசூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் புதனன்று அதிகாலை முதலே ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் மாரடைப்பு அறிகுறி காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு குவிந்தனர். வியாழக்கிழமை அன்றும் இதே நிலை நீடித்தது. மாரடைப்பு அறிகுறிக்கு மக்கள் வரிசையில் காத்திருந்து பரிசோ தனை செய்து வருவதால் மைசூரில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது.