சங்கி துணைவேந்தரை நீக்கக் கோரி மாணவர்கள் ஆளுநர் மாளிகை முற்றுகை
பல்கலைக்கழகத்தை காவிமய மாக்க ஆளுநரை பயன் படுத்தி ஆர்எஸ்எஸ் நடத்தி வரும் முயற்சிகளுக்கு எதிராக ஆளுநர் மாளிகை நோக்கி இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். பேரணியை வாழ்த்தி மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம்.சஜி பேசினார். ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய மாணவர்களை தடுப்புகள் அமைத்தும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தியும் காவல் துறையினர் தடுத்தனர். “சங்கி துணைவேந்தர் அரபிக்கடலில்” என்னும் பதாகையுடன் எஸ்எப்ஐ மாநில தலைவர் எம்.சிவபிரசாத் தலைமையில் மாணவர்கள் அணி வகுத்தனர். ஆர்எஸ்எஸ்-க்காக கேரளத்தின் உயர் கல்வித்துறை யை காவி மயமாக்கவும், சீர ழிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியை தடுக்க போராடிய மாணவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து ஜுலை 10 வியாழனன்று மாநிலம் முழுவதும் வகுப்பு புறக் கணிப்பு போராட்டத்தில் மாணவர் கள் ஈடுபட்டனர். அதைத் தொ டர்ந்தே ஆளுநர் மாளிகை நோக்கிய ஆர்ப்பாட்ட பேரணியும், மாவட்டங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு எதிராக பேர ணிகளையும் எஸ்எப்ஐ நடத்தி யது. வாலிபர் சங்க முற்றுகை துணைவேந்தர் ராஜினாமா செய்யக் கோரி, செவ்வாயன்று கேரள பல்கலைக்கழக தலை மையகத்தை இந்திய மாணவர் சங்கம், ஏஐஎஸ்எப், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் அடுத்த டுத்து முற்றுகையிட்டனர்.வளாகம் முழுவதும் தண்ணீர் பீரங்கிகளுடன் சுமார் 700 காவல்துறையினர் பாது காப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.