states

img

நூலிழையில் உயிர்தப்பிய சவுரவ் கங்குலி

நூலிழையில் உயிர்தப்பிய சவுரவ் கங்குலி

மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தா அருகே பர்த்வான் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வியாழனன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி காரில் சென்று கொண்டிருந்தார். துர்காபூர் விரைவுச் சாலையில் கங்குலி யின் கார் சென்றுகொண்டிருந்த போது,  தாதுபூர் அருகே வேகமாகச் சென்று கொண்டிருந்த லாரி திடீரென்று பிரேக் பிடித்தது. இதனை சாதுரியமாக கணித்த கங்குலியின் கார் ஓட்டுநர் தக்க சம யத்தில் பிரேக் பிடித்தார். மேலும் கங்குலி கார் அடித்த பிரேக்கால் பின்னால் வந்த இரு கார்களும் ஒன்றோடுஒன்று மோதி விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் கங்குலி காயமின்றி நூலிழையில் உயிர்தப்பினார்.