states

img

மகாராஷ்டிராவில் கொடூரம் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை செய்த பள்ளி நிர்வாகம்

மகாராஷ்டிராவில் கொடூரம்

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை செய்த பள்ளி நிர்வாகம்

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ளது ஷாஹாபூர். இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிப்பறையில் ரத்தக்கறை இருப்பதாகக் கூறி, செவ்வா யன்று 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளிடம் பள்ளி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். மாணவிகளில் யாருக்கேனும் மாத விடாய் ஏற்பட்டிருக்கிறதா என பள்ளி நிர்வாகக் குழு கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, மாதவிடாய் இருப்பதாகக் கூறப்பட்ட மாணவிகளின் கைரே கையைப் பெற்ற பள்ளி நிர்வாகம், மாதவிடாய் இல்லையெனக் கூறிய மாண விகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை நிர்வாணப் படுத்தியதுடன், மாதவிடாயுடன் இருக்கிறார்களா என்று சோதனையும் நடத்தியுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த வெட்கக்கேடான செயலை, தங்கள் பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்த தால், புதன்கிழமை அன்று பள்ளி வளா கத்தில் மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்திற்குப் பின் பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், உதவியா ளர்கள் உள்பட 8 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.