நாக்பூர், ஜூலை 8 - அமைச்சரவை ஒன்றும் அரங்கமல்ல; எவ்வளவு பேரை வேண்டுமானாலும் அடைத்து வைப்பதற்கு.. என்று ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக அமைச்ச ரவையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அண் மையில் இணைந்தது. ஷிண்டே அமைச்சரவை யில், பாஜக-வைச் சேர்ந்த தேவேந்திர பட்னா விஸ் ஏற்கெனவே துணைமுதல்வராக இருக்கும் நிலையில், தற்போது அஜித் பவாரும் மற்றொரு துணை முதல்வராக ஆக்கப்பட்டுள்ளார். அவரு டன் சேர்ந்தவர்கள் 8 பேருக்கும் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் கனவுடன், சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளிலிருந்து தினமும் மூத்த தலைவர்கள் பலர், ஷிண்டே அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பின்னணியில், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, “ஒருவருக்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தால், அவர் மகிழ்ச்சி யாகவும் மனநிறைவோடும் வாழ்கிறார் என அர்த்தம். தற்போது கவுன்சிலர்கள் எம்எல்ஏ-வாக முடியவில்லை என்றும், எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக முடியவில்லை எனவும் கவ லைப்படுகின்றனர். நல்ல துறை கிடைக்க வில்லை என அமைச்சர்கள் வருத்தப்படுகிறார் கள். அமைச்சர் ஆவதற்கு தங்களுக்குரிய முறை எப்போது வரும் என சிலர் காத்திருக்கின்றனர். இதற்காக கோட் – சூட் தைத்து வைத்து தயாராக உள்ளனர். கோட் சூட் இருந்து என்ன பயன்? அதற்கு கடும் போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் 2200 பேர் வரை அமரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு மேல் ஆட்கள் வந்தாலும் அரங்கத் தில் அமர வைக்கலாம். ஆனால், அதுபோல், ஒரு மாநிலத்தில் அமைச்சர்களின் எண்ணிக் கையை அதிகரிக்க முடியாது’’ என குறிப்பிட்டுள் ளார். மகாராஷ்டிராவில் பாஜக-வும் இடம்பெற் றுள்ள கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. எனினும், அந்த பாஜக கூட்டணி அரசையே கிண்டல டிக்கும் வகையில் நிதின் கட்காரி பேசியி ருப்பது, விவாதங்களைக் கிளப்பியுள்ளது.