states

img

‘டிச. 6’ வன்மத்தைக் கொட்டிய சிபிஐ முன்னாள் இயக்குநர்!

டிசம்பர் 6 - அயோத்தியில் இருந்த பாபர் மசூதி சங்-பரிவாரங்களால் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட்ட நாளாகும். இந்தியாவின் மதச்சார்பின்மை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாளாக வரலாற்றாளர்கள் இதனை குறிப்பிடு கின்றனர். ஆனால், “இது முகலாயக் குப்பை களை அகற்றிய நாள்” என்று குறிப்பிட்டு முன் னாள் சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் டுவிட்ட ரில் வன்மத்துடன் பதிவிட்டுள்ளார். “ராம ஜென்ம பூமியில் இருந்து முகலாய குப்பைகளை அகற்றிய இந்த புனிதமான ஆண்டு விழாவில், அங்கு மீண்டும் மந்திர் கட்டப்படுவதற்கு வழிவகுத்த பி.வி. நரசிம்ம ராவ், கல்யாண் சிங், அசோக் சிங்கால் ஜி மற்றும் அனைவரையும் நான் மரியாதையுடன் நினைவு கூர்ந்து நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.