states

img

1,777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை நிறுத்திய கர்நாடக அரசு மீண்டும் எழுச்சி பெற்ற விவசாயிகள் போராட்டம்

1,777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை நிறுத்திய கர்நாடக அரசு மீண்டும் எழுச்சி பெற்ற விவசாயிகள் போராட்டம்

கிராமங்கள் முழுவதும் கொண்டாட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ளது தேவனஹள்ளி. இங்கு விண்வெளி பூங்கா அமைக்க 1,777 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த முந்தைய பாஜக அரசு திட்டமிட்டு, அறிவிப்பு வெளியிட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் விவசா யிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான சித்தராமையா பங்கேற்று,”காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தேவனஹள்ளி விவசாய நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும்” என அறிவித்தார். விவசாய சங்க கூட்டமைப்பி னர் 1,198 நாட்களாக உண்ணாவிரதம், சாலை  மறியல், பேரணி என தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாற வில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு சித்தராமையா தலைமையிலான அரசு தேவன ஹள்ளியில் விவசாய நிலம் கையகப்படுத்து வதை தீவிரப்படுத்தியது. இதனை கண்டித்து ஜூன் 26 அன்று விவசாயிகள் நடத்திய போராட் டத்தில் கர்நாடக காவல்துறையினர் தடியடி  நடத்தினர். இதில் விவசாயிகள் காயம டைந்தனர். விவசாயிகள் மீதான கர்நாடக அரசின் தாக்கு தலை கண்டித்தும், விவசாய நிலத்தை கட்டா யமாக கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) சார்பில் ஜூலை 4ஆம் தேதி சன்ன ராயபட்டணத்தில் மாபெரும் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர்களான ராகேஷ் திகாயத் (பிகேயு), டாக்டர் விஜு கிருஷ்ணன் (அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் பொதுச் செயலாளர்) உள்ளிட்டோர் போராட் டத்தில் பங்கேற்று உரையாற்றினர். அன்று மாலை விவசாயிகள் அமைப்பு - அரசு தரப்பு  இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி பெங்களூருவில் முதல மைச்சர் சித்தராமையாவை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தின. போராட்டம் வெற்றி இந்நிலையில், விவசாயிகளின் நீண்டகால போராட்டத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிழமை சித்தராமையா தலைமையில் உயர் மட்டக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இறுதி அறிவிப்பை ரத்து செய்ய கர்நாடக அரசாங்கம் முடிவு செய்தது. மேலும் இழப்பீடு வழங்கிய பிறகு, நிலம் கொடுக்க முன்வரும் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. சித்தராமையா பாராட்டு கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பின் போது சித்தராமையா கூறு கையில்,”விவசாய சங்க பிரதிநிதிகளின் கோ ரிக்கையை ஏற்று, விண்வெளி பூங்கா அமைப்ப தற்காக 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முடிவை கர்நாடக அரசு கைவிடுகிறது. அதற்கான அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அதே வேளையில் சில விவசாயிகள் தங்களின் நிலத்தை தாமாக முன்வந்து வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அந்த நிலங்களை கையகப்படுத்தி, அதனை தொழில் வளர்ச்சிக்கு அரசு பயன்படுத்தும். விண்வெளி பூங்காவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க விரும்பிய பல தொழிலதிபர்கள் தற்போது அண்டை மாநி லங்களுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நிலம் கைய கப்படுத்தும் திட்டத்திற்கு எதிரான விவசாயிக ளின் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது” என அவர் பாராட்டினார். தேவனஹள்ளியில் கொண்டாட்டம் கர்நாடக அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தேவனஹள்ளியில் விவசாயிகள், பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி வாழ்த்து இந்நிலையில், 1,777 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட தீவிர போராட்டம் நடத்திய தேவனஹள்ளி விவ சாயிகளின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என ஐக்கிய விவசாயி கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.  இதுதொடர்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில்,”தேவனஹள்ளி விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடக் கோரி தீவிரமாக போராட்டம் நடத்திய கர்நாடகாவின் சம்யுக்த ஹோராட்டா மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தலித் அமைப்புகள் அனைத்தையும், இந்த வெற்றியை உறுதி செய்த அவர்களின் சமரசமற்ற போராட்டத்திற்காக ஐக்கிய விவ சாயிகள் முன்னணி வாழ்த்துகிறது. விவசாய அமைப்புகளின் ஒற்றுமை மற்றும் தொழிற் சங்கங்களின் ஆதரவு, 3 ஆண்டுகால நீடித்த போராட்டத்தின் போது உருவான பரவலான தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை ஆகியவை இத்தகைய பெரிய வெற்றியை உறுதி செய்த தீர்மானிக்கும் காரணிகள் ஆகும். தேவனஹள்ளியின் நிலப் போராட்டம் இழப்பீட்டிற்காக அல்ல, மாறாக வளமான விவ சாய நிலத்தை பாதுகாப்பதற்காக நடத்தப் பட்டது என்பதால் இந்த வெற்றி தனித்துவமா னது மிக முக்கியமானது. முந்தைய பாஜக அரசு, ரியல் எஸ்டேட் மாபியா மற்றும் கட்டுமானத் தொழில் செய்பவர்களின் தூண்டுதலால் பெங்க ளூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வளமான பல பயிர்கள் விளையும் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் கொடுக்க முயற்சித்தது. விவசாயிகளுடன் ஒற்றுமை  13 கிராமங்களின் விவசாயிகளின் எதிர்ப்பை ஒருமுகப்படுத்தி, முந்தைய பாஜக அரசு மற்றும் தற்போதைய காங்கிரஸ் அரசின் சில அமைச்சர்கள் 3 கிராமங்களை கையகப் படுத்தல் பட்டியலில் இருந்து விலக்கி ஒற்றுமை யை பிளக்கச் செய்த முயற்சிகளை எதிர்த்தனர். ஜூன் 26 அன்று, அமைதியாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியது மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.  காவல்துறையின் கடுமையான நட வடிக்கைக்கு எதிராக மாநிலம் முழுவதும் உட னடியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பரவலான போராட்டங்கள் நடந்தன. எழுத்தாளர்கள், கலை ஞர்கள், சிவில் சமூக குழுக்கள் ஆகியோரும் விவசாயிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தி னர். பின்னர் போராட்டம் பெங்களூரின் சுதந்திர பூங்காவுக்கு மாறியது. குறிப்பாக “சம்யுக்த ஹோராட்டா கர்நாடகா” என்ற பெயரில் ஆயி ரக்கணக்கானோர் பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகேஷ் திகாயத், விஜூ கிருஷ்ணன், தர்ஷன் பால், யுத்வீர் சிங் உள்ளிட்ட ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்க தலைவர்களும் போராட்டங்களில் பங்கேற்றனர்.  இத்தகைய சூழலில், கர்நாடக முதல மைச்சர் சித்தராமையா கையகப்படுத்தல் நட வடிக்கைகளை நிறுத்தி, 1,777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தல் பட்டியலில் இருந்து விலக்கி, கையகப்படுத்தல் அச்சத்திலிருந்து விடு வித்த நேர்மறையான முடிவை ஐக்கிய விவசாயி கள் முன்னணி கவனிக்கிறது. இந்த வெற்றி 2013ஆம் ஆண்டின் நில கையகப்படுத்தல், மறு வாழ்வு மற்றும் மீள்விடுப்பு சட்டத்தை மீறிய அதீத மான மற்றும் சட்டவிரோதமான நில கையகப் படுத்தலுக்கு எதிராக நாடு முழுவதும் ஆயி ரக்கணக்கான இடங்களில் நடைபெறும் போராட் டங்களை ஊக்குவிக்கும்.  ஐக்கிய விவசாயி கள் முன்னணி விவசாயிகளை இந்த வரலாற்று போராட்டத்தின் தகவலை பரவலாக பகிர்ந்து கொள்ளவும், தங்கள் கிராமங்கள் மற்றும் தாலுகா மையங்களில் பேரணிகள் நடத்தி இந்தப் பெரிய வெற்றியை கொண்டாடவும் அழைக்கிறது.