states

img

29 திரைக்கலைஞர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

29 திரைக்கலைஞர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

ஆன்லைன் சூதாட்டச் செயலி

ஹைதராபாத் ஸ்மார்ட்போனில் உழைப்பி ன்றி எளிமை யாக பணம் சம்பாதிக்கலாம், முதலீடு செய்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை ஏமாற்றும் வகையில் ஆன்லைனில் சூதாட்டம் தொ டர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்காக சூதாட்டச் செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சூதாட்டச் செயலிகள் பிரபல நடி கர்கள், நடிகைகள், யூடியூபர்க ளை கொண்டு விளம்பரம் செய் யப்படுகின்றன. நடிகர்கள் கூறுவதை கண்டு முதலீடு செய்த நபர்கள் பலர் தற்கொலை முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்வது வாடிக்கையான சம்பவம் ஆகி விட்டது. இதுதொடர்பாக பொது மக்கள் தரப்பில் புகார் குவிந்து வருகிறது. இந்நிலையில், பொது மக்கள் அளித்த புகாரின் அடிப்ப டையில் சூதாட்டச் செயலிகள் மூலம் விளம்பரம் செய்ததாக மொத்தம் 29  திரைக்கலைஞர் கள் மீது ஹைதராபாத், சைபரா பாத் (ஹைதராபாத் பெருநகர காவல் துறையின் ஒரு பகுதி) காவல்துறையினர் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்ப டையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகர்கள் விஜய் தேவர கொண்டா, பிரகாஷ்ராஜ், நடி கைகள் மஞ்சுலட்சுமி, நிதி அகர் வால், அனன்யா நாகல்லா, நீது அகர்வால், விஷ்ணுபிரியா, வர்ஷினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிர பலங்கள் என 29 பேர் மீது அம லாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.